செவ்வாய், 19 அக்டோபர், 2021

மத்திய அரசு - காணமால் போன மீனவரை விரைவில் கண்டுபிடிக்கவும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.கே.வாசன்


 தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதில் இருந்து காப்பாற்றப்படவும், மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபடவும் மத்திய அரசின் நடவடிக்கை அவசரம், அவசியம் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.

பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகளை பறிமுதல் செய்வதும், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் நடைபெறுகிறது. 

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து நாட்டுப்படகில் சென்ற மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகின் மீது கடற்படையின் கப்பல்  மோதி மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கினர். இவர்களில் ஒரு மீனவர் காணவில்லை. மற்ற இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இது இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம். இதனை த.மா.கா சார்பில் கண்டிக்கிறேன். 

இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலால் தமிழக மீனவர்களின் அன்றாட குடும்பச் செலவுக்கே தேவையான பொருளாதாரம் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது.

மத்திய அரசு - காணமால் போன மீனவரை விரைவில் கண்டுபிடிக்கவும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பதற்கும், சேதமுற்ற படகுகள் மற்றும் மீன்பிடிச்சாதனங்களுக்கு இழப்பீடு பெறவும், இது போன்ற அராஜகம் இனியும் தொடராமல் இருப்பதற்கும் மத்திய அரசின் நடவடிக்கை அவசரம், அவசியம்.

மேலும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல் இருக்கவும், மீன்பிடித்தொழிலில் பாதுகாப்பாக ஈடுபடவும் மத்திய மாநில அரசுகள் தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக