சனி, 16 அக்டோபர், 2021

2021-ஆம் ஆண்டுக்கான கப்பற்படைக் கமாண்டர்களின் தளபதிகளின் இரண்டாவது மாநாடு புதுதில்லியில் அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது.


 2021-ஆம் ஆண்டுக்கான கப்பற்படைக் கமாண்டர்களின் தளபதிகளின் இரண்டாவது மாநாடு புதுதில்லியில் அக்டோபர் 18 முதல் 22 வரை நடைபெற உள்ளது.  ராணுவ உத்திகள் நிலையில், முக்கியமான கடல்சார்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் நிறுவன ரீதியான அமைப்பின் மூலம் அரசின் 5த்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் கப்பற்படைக் கமாண்டர்களுக்கு இந்த மாநாடு ஒரு மேடையாக இருக்கிறது.  இந்த மண்டலத்தில் விரைந்து மாறி வரும் நிலைமை காரணமாக இந்த மாநாடு பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் குறிப்பிடத்தகுந்ததாகவும்  அமைகிறது.

இந்த மாநாட்டின் போது தேசப்பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து கப்பற்படைக் கமாண்டர்களிடையே உரையாற்றும் மாண்புமிகு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அவர்களுடன் கலந்துரையாடுவார்.  

கடந்த சில மாதங்களில் இந்திய கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், போக்குவரத்து நடைமுறைகள், மனிதவள மேம்பாடு பயிற்சி, நிர்வாக செயல்பாடுகள் ஆகியவைக் குறித்தும் முக்கிய முன்முயற்சிகளுக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் கப்பற்படைத் தலைமை தளபதி மற்றும் கப்பற்படைக் கமாண்டர்கள் விவாதித்து ஆய்வு  நடத்த உள்ளனர்.

ராணுவத் தலைமை தளபதி இந்திய ராணுவத்தின் தளபதிகள், இந்திய விமானப்படைத் தளபதி ஆகியோரும் செயல்பாட்டுச்சூழல் முப்படைகளின் ஆற்றலை அதிகரிப்பதற்கான வழிவகைகள் பற்றி கப்பற்படைக் கமாண்டர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக