வியாழன், 28 அக்டோபர், 2021

அதிபர் தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக உஸ்பெகிஸ்தானுக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா பயணம்


 உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணைய தலைவரின் அழைப்பின் பேரில், 2021 அக்டோபர் 24 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலை கண்காணிப்பதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு சுஷில் சந்திரா தலைமையிலான மூன்று பேர் குழு அந்நாட்டுக்கு சென்றது. புதிய தேர்தல் விதியின் கீழ் நடத்தப்பட்ட இந்த தேர்தலை சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்து வந்தது.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் உஸ்பெகிஸ்தானின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் திரு. ஜைனிடின் எம் நிஜாம்கோட்ஜேவ் தேர்தல் ஒத்துழைப்பு குறித்த இருதரப்பு கூட்டத்தை 2021 அக்டோபர் 21 அன்று நடத்தினர்.

உஸ்பெகிஸ்தான் தேர்தல் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் நடைபெறும் தேர்தலின் வாயிலாக ஐந்தாண்டு காலத்திற்கு அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை பரிந்துரைக்க முடியும். ஐந்து வேட்பாளர்கள் - நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் வேட்பாளர் உஸ்பெகிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசு நிதியுதவி செய்கிறது. உஸ்பெகிஸ்தானின் முக்கிய இடங்களில் ஐந்து வேட்பாளர்களைப் பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களுடன் கூடிய பல விளக்கப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக