வியாழன், 28 அக்டோபர், 2021

‘இந்தோ-பசிபிக்’ பகுதி பல நாடுகளின் விதிமுறைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயற்கையான பகுதி என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.- திரு.ராஜ்நாத் சிங்


இந்தோ-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை 2021 காணொலிகாட்சி மூலம் அக்டோபர் 27ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் முக்கிய உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:

கடல் சட்டம் குறித்த ஐநா மாநாட்டில் முடிவுசெய்யப்பட்டபடி அனைத்து நாடுகளின் உரிமைகளை மதிப்பதில் இந்தியா உறுதியாகவுள்ளது. ‘இந்தோ-பசிபிக்’ பகுதி பல நாடுகளின்  விதிமுறைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இயற்கையான பகுதி என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார். சரக்குப்போக்குவரத்து, கருத்துக்கள் பரிமாற்றம், புத்தாக்கம், மற்றும் உலக நாடுகளை நெருங்கிவரச்செய்வதற்கான பங்களிப்பு ஆகியவற்றிற்கு கடல்கள் முக்கிய தகவல் தொடர்பு இணைப்பாக உள்ளது. செழிப்பிற்கான நிலையான பாதையை தக்கவைக்க பிராந்தியத்தின் கடல்சார் திறனை திறம்படவும் ஒத்துழைப்புடனும் ஒழுங்குபடுத்தவேண்டும்.

21ம் நூற்றாண்டின் கடல்சார் யுக்தியில் பரிணாமம் பிராந்தியத்தின் கடந்தகாலத்தைச் சார்ந்துள்ளது. இது தற்போதைய நிலவரத்தை ஆராய்ந்து எதிர்காலத்திற்கு கடல்சார் யுக்திகளின் அடித்தளத்தை உருவாக்கும், விதிமுறைகளை கொண்டுவருகிறது. இவ்வாறு மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக