செவ்வாய், 19 அக்டோபர், 2021

இந்தியாவை மின்னணு மற்றும் தொழில்நுட்ப தலைமையகமாக மாற்றுவதில் திரு நரேந்திர மோடி அரசு தீவிரமாக உள்ளது.- மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர்


 இணையத்தை பயன்படுத்தும் உபகரணங்களுக்கான கடன் அட்டை அளவில் தயாரிக்கப்பட்டுள்ள சிறு பெட்டகத்தை வெளியிட உள்ள பெங்களூருவின் சிடாக் மையத்தை மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல் இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார்.  இணையப் பயன்பாட்டு உபகரணங்களின் மேம்பாட்டு தளமான இண்டஸ் ஐஓடி சிறு பெட்டகத்தை சிடாக் மையம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடன் அட்டை அளவில் சிடாக்கால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெட்டகத்தில் ஆறு சென்சார்கள் மற்றும் ஏராள வசதிகள் உள்ளன. சிறிய மற்றும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த கிட், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளில் உள்ளூர் மற்றும் ஸ்மார்ட் தீர்வுகளை உருவாக்க உதவும்.

ரூ 2,500 விலையிலான இந்த கிட், அரசு மின்னணு சந்தை தளத்தில் விரைவில் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்தை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கவும் சிடாக் தயாராக உள்ளது.

சிடாக் பெங்களூருவில் உருவாக்கப்பட்ட பிற புதுமையான தொழில்நுட்பங்களையும் திரு சந்திரசேகர் ஆய்வு செய்தார் - திறன்மிகு தண்ணீர் அளவிடும் கருவி, திறன்மிகு நீர் விநியோக அமைப்பு, சிடாக்கின் உயர் செயல்திறன் மென்பொருள் தீர்வுகள் மற்றும் சேவைகள், பரம் உத்கர்ஷ் சூப்பர் கம்ப்யூட்டிங் வசதி இவற்றில் அடங்கும்.

இந்த முயற்சிகளைப் பாராட்டிய திரு சந்திரசேகர், ட்ரோன்களுக்கு ஐஓடியை விரிவுபடுத்தவும், எச்பிசியின் தொழில்துறை பயன்பாட்டுக்கும், வடிவமைப்பின் தொடக்கத்திலேயே இறுதி பயனர்களுடன் தொடர்பு கொள்ளவும் பரிந்துரைத்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் லட்சியத்தை பகிர்ந்து கொண்ட திரு சந்திரசேகர், “இந்தியாவை மின்னணு மற்றும் தொழில்நுட்ப தலைமையகமாக மாற்றுவதில் திரு நரேந்திர மோடி அரசு தீவிரமாக உள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் ஒரு உதவியாளர்/பங்குதாரரின் பாத்திரத்தை வகிக்கும்,” 

மேலும் பேசிய அவர், “வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் வாய்ப்பு இந்தியாவில் தற்போது உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறைக்கான ஒய்2கே தருணம் என்று இதை நான் அழைக்கிறேன். செமிகண்டக்டர் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து பணியாற்ற திரு நரேந்திர மோடி அரசு உறுதியாக உள்ளதோடு, சரியான கொள்கை கட்டமைப்பையும் வழங்கும்,” .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக