வெள்ளி, 1 ஜூலை, 2022

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது


 தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவின் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிவிட்டதாக என்டிபிசி(தேசிய அனல்மின் கழகம்) அறிவித்துள்ளது. ராமகுண்டம் மிதக்கும் சூரியசக்தி திட்டம், என்டிபிசியால் தொடங்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி திட்டமாகும். 

தெலங்கானாவின் ராமகுண்டம் 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி திட்டத்தின் கடைசிப்பகுதியான 20 மெகாவாட் திட்டம் 01.07.2022 அன்று 00.00 மணியளவில் வெற்றிகரமாக உற்பத்தியை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மொத்த மின்உற்பத்தி திறன் 69,134.20 மெகாவாட் ஆகும். இதில் 23 நிலக்கரியையும், 7 எரிவாயுவையும் அடிப்படையாக கொண்டவை. ஒன்று நீர்மின் திட்டமாகும். 19 புதுபிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களாகும். கூட்டு முயற்சியின் கீழ் என்டிபிசி, நிலக்கரி அடிப்படையிலான 9 மின் உற்பத்தி நிலையங்களையும், 4 எரிவாயு, 8 நீர்மின் திட்டங்கள் மற்றும் 5 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக