வியாழன், 21 ஜூலை, 2022

மாலத்தீவுகளின் நீதி சேவை ஆணையத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே நீதி ஒத்துழைப்பு துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


 மாலத்தீவு குடியரசின் நீதி சேவை ஆணையத்திற்கும், இந்தியாவுக்கும் இடையே நீதி ஒத்துழைப்பு துறையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது நீதி ஒத்துழைப்பு துறையில் இந்தியாவுக்கும், இதர நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான எட்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமாகும்.

நீதிமன்ற டிஜிட்டல்மயத்திற்கு தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டை கண்டறிவதற்கான தளத்தை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும். மேலும் இரு நாடுகளிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்கள் வளர்ச்சிக்கான ஆற்றலையும் இது ஏற்படுத்தும்.

சமீப ஆண்டுகளில் இந்தியா – மாலத்தீவுகள் இடையே நெருக்கமான உறவு பல நிலைகளில் ஆழமாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெறும். இது இரு நாடுகளுக்கு இடையே நீதித்துறை ஞானம் மற்றும் தொழில்நுட்பம், இதர சட்டத்துறைகளில் பரிமாற்றம் செய்து கொள்ள உதவுவதோடு மட்டுமின்றி “அண்டை நாடுகள் முதலில்” என்ற கொள்கையின் நோக்கங்களை அதிகரிக்கவும் செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக