செவ்வாய், 28 செப்டம்பர், 2021

சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை காணாத மாபெரும் ஊழல் பெருச்சாளியாக பிரதமர் மோடி அம்பலப்பட்டு நிற்கிறார்.- கே.பாலகிருஷ்ணன்


 பி.எம்.கேர்ஸ் என்ற பெயரில், கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி வசூலிக்கப்பட்ட பெரும் தொகை அரசு நிதி அல்ல என்பது தில்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மோடி ஆட்சியின் கேடுகெட்ட மெகா ஊழலையே அவர்கள் அப்பட்டமாக்கியுள்ளார்கள்.

பி.எம்.கேர்ஸ் நிதி வசூலுக்கான விளம்பரங்கள் அரசின் தளங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து நிதி கட்டாயமாக்கி பெறப்பட்டது. அச்சத்திலும், அக்கறையிலும் பல தனியார் நிறுவனங்கள் பெரும் தொகை கொடுத்தார்கள். பிரதமர் இந்த நிதிக்கு விளம்பரம் செய்தார்.

அமைச்சர்களுக்கு தரப்படும் பரிசுப் பொருட்களும் கூட அரசின் சொத்து என்கிறபோது, பி.எம் கேர்ஸ் எப்படி அரசு நிதி இல்லாமல் போகும்?

அதிலும், இந்த மொத்த நிதியையும் கையாள்வது பிரதமர் தலைமையில், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள்தான். நிதித்துறையின் துணை செயலராக உள்ள அரசு அதிகாரி இதனை நிர்வகிக்கிறார். 

ஆனால், அதன் விபரங்கள் எதுவும் வெளியில் சொல்ல மாட்டார்கள். முதலில் ஆர்.டி.ஐ சட்ட வரம்பிற்கும் அது வராது என்றார்கள். இப்போது அது அரசு நிதியே இல்லை என்கிறார்கள். இந்த வகையில் அதன் வரவு செலவினை மூடி மறைக்கிறார்கள்.

பி.எம்.கேர்ஸ் நிதியில் தரமற்ற பொருட்கள் வாங்கப்பட்டு முறைகேடு நடந்தபோது, நாடாளுமன்றத்தாலும் அதைக் கேள்வி கேட்க முடியவில்லை. நீதிமன்றத்தாலும் அதை கேள்வி கேட்க முடியாத நிலையை ஏற்படுத்திகிறார்கள்.

திட்டமிடப்படாத ஊடரங்குகளால் நாட்டின் பொருளாதாரம் தள்ளாடிக் கொண்டிருக்கும் போதிலும், இத்தனை கச்சிதமாக திட்டமிட்டு  உருவாக்கப்பட்டிருக்கிறது 'பி.எம்.கேர்ஸ்'. இந்திய மக்களை அடிமுட்டாளகக் கருதியே இப்படி அப்பட்டமாக செயல்படுகின்றனர்.

இதன் மூலம், சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை காணாத மாபெரும் ஊழல் பெருச்சாளியாக பிரதமர் மோடி அம்பலப்பட்டு நிற்கிறார். விரைவில், இந்த கேடுகெட்ட போக்குகளை மக்கள் சக்தி முடிவிற்கு கொண்டு வரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக