கே.பாலகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கே.பாலகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 பிப்ரவரி, 2022

அதிமுக அதற்கு ஒத்துழைக்குமா? சட்டமன்ற கூட்டத்தில் என்ன செய்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் பார்க்கத்தான் போகிறது.- கே.பாலகிருஷ்ணன்


நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் செயல், தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. 

இந்நிலையில், தமிழக முதலமைச்சர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக ஒருங்கிணைத்த சட்டமன்ற கட்சி தலைவர்களுடைய கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ளது.

ஆனால் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஆளுநரின் செயலை ஆதரித்துக் கொண்டே, 'நீட் தேர்வு ரத்து செய்வதில் அதிமுக உறுதியாக உள்ளது' என்றும் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது எதற்காக இந்த இரட்டை வேடம் என்ற கேள்விதான் எழுகிறது.

திங்கள், 15 நவம்பர், 2021

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு: தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்க!.- கே.பாலகிருஷ்ணன்

 பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவு: 

தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்க!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

கோவை, பொன் தாரணி என்ற மாணவி சின்மயா வித்யாலாயா பள்ளியில் கடந்த ஆறுமாதம் முன்பு வரை படித்து வந்துள்ளார். அங்கிருந்த ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் சொன்ன பிறகும் மாணவியை சமாதானப்படுத்தியதைத் தவிர சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கையோ, குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்ற பிறகும் தொடர்ந்த பாலியல் தொல்லையால் 11.11.2021 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

புதன், 6 அக்டோபர், 2021

அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!

 அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை ஏற்பு! நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு!

 தமிழ்நாட்டிலுள்ள அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்படுவதை கைவிட வேண்டுமெனவும்,  அலுவலக மொழிகள் தொடர்பான அரசியலமைப்பு சட்டம் 347 பிரிவின் படி ஒரு மாநிலத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தில் மக்கள் பயன்பாட்டில் இருக்கும் மொழியையே தேர்வு செய்து கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அஞ்சலக சிறுசேமிப்பு படிவங்கள் தமிழ் மொழியில் தான் அச்சடிக்கப்பட வேண்டுமெனவும் ஒன்றிய அரசுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒரு கோரிக்கையை விடுத்திருந்தார்.   

வெள்ளி, 1 அக்டோபர், 2021

பேராசிரியர் ஜெயராமன் மீது கொலைமிரட்டல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! - கே. பாலகிருஷ்ணன்

 பேராசிரியர் ஜெயராமன் மீது கொலைமிரட்டல்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!! - கே. பாலகிருஷ்ணன்

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் கடந்த 19.9.2021 அன்று நடந்த ஒரு கருத்தரங்கில் தமிழ் தேசியம் என்ற பெயரில் திராவிட, பெரியார் எதிர்ப்பு குறித்து பேசியோருக்கு தனது கருத்தை தெரிவித்து பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பேராசிரியர் ஜெயராமன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் மிக, மிகக் கீழ்த்தரமான சொற்களால் சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவது, அவதூறுகள் செய்வது, கூட்டமைப்பினர் கடைகளுக்குச் சென்று கொலை மிரட்டல் விடுவது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளனர். இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை காணாத மாபெரும் ஊழல் பெருச்சாளியாக பிரதமர் மோடி அம்பலப்பட்டு நிற்கிறார்.- கே.பாலகிருஷ்ணன்


 பி.எம்.கேர்ஸ் என்ற பெயரில், கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி வசூலிக்கப்பட்ட பெரும் தொகை அரசு நிதி அல்ல என்பது தில்லி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மோடி ஆட்சியின் கேடுகெட்ட மெகா ஊழலையே அவர்கள் அப்பட்டமாக்கியுள்ளார்கள்.

பி.எம்.கேர்ஸ் நிதி வசூலுக்கான விளம்பரங்கள் அரசின் தளங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து நிதி கட்டாயமாக்கி பெறப்பட்டது. அச்சத்திலும், அக்கறையிலும் பல தனியார் நிறுவனங்கள் பெரும் தொகை கொடுத்தார்கள். பிரதமர் இந்த நிதிக்கு விளம்பரம் செய்தார்.

புதன், 25 ஆகஸ்ட், 2021

பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும்.- கே.பாலகிருஷ்ணன்



தமிழக பாஜக தலைமையின் மீது எழுந்துள்ள பாலியல் புகார்களும், அடுத்தடுத்து வரும் செய்திகளும் அதிர்ச்சி தருகிறது. மனித மாண்புகளையே கேள்விக்குள்ளாக்குகிறது.

 பாஜகவின் பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், ஏதோ பெருந்தன்மையானவர் போல ராஜினாமா செய்திருக்கிறார். இவ்விசயத்தில் ராஜினாமா மட்டும் தீர்வாகாது, அவர் சட்டத்திற்கு முன் பதில் சொல்லியாக வேண்டும்.

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு - மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு - கே.பாலகிருஷ்ணன்


 தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சிக்கு ஊக்கமளிக்கும் உயர்நீதிமன்ற தீர்ப்பு - மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு 

மைசூரில் கல்வெட்டியல் துறையில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் தமிழுடன் தொடர்புடையவை ஆகும். ஆனால் இந்தக் கல்வெட்டுகள் குறித்து ஆய்வு தேங்கியிருப்பதுடன், தற்போது வரை அவற்றை புதுப்பித்து வெளியிடவில்லை. இவ்விசயத்தில் தலையீடு தேவை என மார்க்சிஸ்ட் கட்சி பலமுறை அரசை வலியுறுத்திவந்துள்ளது. 

புதன், 18 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் “ மக்கள் விசாரணை மன்றம் - மோடி அரசின் மீது குற்றப்பத்திரிக்கை” நிகழ்ச்சி - கே.பாலகிருஷ்ணன்


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2021 ஆகஸ்ட் 17-18 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் தலைமை தாங்கினார். கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர்கள் உ.வாசுகி,  பி.சம்பத் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்களும் மாநிலக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

சனி, 14 ஆகஸ்ட், 2021

தமிழ்நாட்டில் உள்ள விவசாய நிலப்பரப்பில் சுமார் 45 சதவிகித நிலங்களுக்கு போதுமான பாசன நீர் கிடைப்பத்தில்லை.- கே.பாலகிருஷ்ணன்

 புதிய திட்டங்களுக்கான முன்மொழிவுகளோடு வெளியிடப்பட்டுள்ளது முதல் வேளாண் நிதிநிலை அறிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

 தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண்துறைக்கென தனியானதொரு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டிருப்பது வரவேற்பிற்குரியது. நிதிநிலை அறிக்கையில் பயிர்வாரியாக பல்வேறு புதிய முன்மொழிவுகள் இடம் பெற்றுள்ளதோடு அவற்றை அமலாக்குவதற்கான நிதி ஒதுக்கீடும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பிரதமர் மோடியும், ஆளும் கட்சியான பாஜகவும் கள்ள மெளனம் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டை விட வெட்கக்கேடானது வேறு ஏதுமில்லை.- கே.பாலகிருஷ்ணன்


 இந்திய, ஹாக்கி பெண்கள் அணியின் ஒலிம்பிக் ஆட்டம், பதக்கக் கனவை நிறைவேற்றவில்லை என்ற போதிலும், நாட்டுக்கே பெருமிதம் தரக்கூடிய ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியது.

ஆனால், ஹேட்ரிக் கோல் அடித்த சாதனைப் பெண் வந்தனாவின் வீட்டிற்கு முன், சாதி ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் போட்ட கூச்சலும், அவமானகரமான நடவடிக்கைகளும் ஏற்கவே முடியாதவையாகும்.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்கவும், சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவோம்.- கே.பாலகிருஷ்ணன்




ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும்; 
தமிழகத்தின் உரிமையை மீட்கவும், தமிழக மக்களின் நலன் காக்கவும்: 
சுயேச்சையாகவும், தோழமைக் கட்சிகளோடு இணைந்தும் தொடர்ந்து போராடுவதென சிபிஐ(எம்) மாநிலக்குழு அறைகூவல்

நூற்றாண்டு விழா கொண்டாடும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தன்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கியூப புரட்சியை சீர்குலைக்கும் வகையில் அமெரிக்க வல்லரசு தொடர்ந்து சீரழிவு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. பொதுமன்றம் கியூபா மீதான தடையை நீக்க வேண்டுமென பலமுறை தீர்மானம் நிறைவேற்றியும் தடையை நீக்க மறுக்கும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி கியூப அரசை கவிழ்க்க முயல்கிறது. இதை எதிர்த்து ஒன்றுபட்டு போராடி வரும் கியூப மக்களுக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய கட்சிகளின் சார்பில் 29.7.2021 அன்று சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சனி, 24 ஜூலை, 2021

டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்டு மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுக! - கே.பாலகிருஷ்ணன்


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் (24.7.2021) நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கடந்த ஆட்சியில் டாஸ்மாக் கடை எதிர்ப்பு உள்ளிட்டு மக்கள் நலனுக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்ப பெறுக! 

வெள்ளி, 23 ஜூலை, 2021

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது! - கே.பாலகிருஷ்ணன்


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் ஜூலை 23, 24, 25 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் நாள் (23.7.2021) நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் - 1:

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பிற்கு

மேலும் கால நீட்டிப்பு வழங்கக் கூடாது!

புதன், 14 ஜூலை, 2021

கொங்கு நாடு பிரிவினை முழக்கம்: சங்க பரிவாரத்தின் சுயநல அரசியலே! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!! - கே.பாலகிருஷ்ணன்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூலை 13,14 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கொங்கு நாடு பிரிவினை முழக்கம்: சங்க பரிவாரத்தின் சுயநல அரசியலே!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

வெள்ளி, 2 ஜூலை, 2021

கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான விரிவாக்கப்பணிகளை உடனடியாக கைவிட வேண்டும்! - கே.பாலகிருஷ்ணன்

 ஜூலை 1-2, தேதிகளில் சென்னையில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்ட தீர்மானம்

கூடங்குளத்தில்  5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான விரிவாக்கப்பணிகளை  உடனடியாக கைவிட வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை - கே.பாலகிருஷ்ணன்

 தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஜக அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது. கடந்த 2016 இல் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்த போதே எழுந்த மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அதில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. 

வியாழன், 24 ஜூன், 2021

அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ. 200 கோடி மெகா மோசடி! தமிழக அரசு - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.- கே.பாலகிருஷ்ணன்

 அரசு நிலத்தை அரசுக்கே ஒப்படைத்து ரூ. 200 கோடி மெகா மோசடி!

தமிழக அரசு - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்திய போது போலி ஆவணங்கள் மூலம் அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா பெற்று அதனை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு விற்று சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக வந்துள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெகா மோசடியில் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஆஷிஷ் மேத்தா, காஞ்சிபுரம் சிவன்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

செவ்வாய், 22 ஜூன், 2021

ஒன்றிய அரசின் நவீன தாராளமயக்கொள்கை, ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் தவறான அணுகுமுறை உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகுந்த தேக்கத்தில் உள்ளது.- கே.பாலகிருஷ்ணன்



சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நல்ல தொடக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு 

திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று நடைபெறும் முதல் சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆற்றிய உரை நல்ல தொடக்கம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொடூரமான கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இச்சவாலை வெற்றிகரமாக இந்த அரசு சமாளித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.

வெள்ளி, 18 ஜூன், 2021

மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் பதுக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. மோடி அரசு இதனை தடுப்பதற்கு மாறாக வேடிக்கைப் பார்க்கிறது.- கே.பாலகிருஷ்ணன்


 அத்தியாவசியப் பொருள்களின் தொடர் விலை உயர்வுகள் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, மோடி அரசு தொடர்ச்சியாக பெட்ரோலியப் பொருள்களின் விலைகளை உயர்த்தி வருகிறது. கடந்த 40 நாட்களில் மட்டும் 21 முறை விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100/-ஐ தாண்டியுள்ளது. டீசல் விலை லிட்டர் ரூ. 100/.ஐ தொடும் நிலை உள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் ஏழை, எளிய, நடுத்தர  மக்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆட்பட்டுள்ளனர். 

புதன், 26 மே, 2021

கொரோனா பரவலை கட்டுப்படுத்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல் - கே. பாலகிருஷ்ணன்

 கொரோனா பரவலை கட்டுப்படுத்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்

• கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே பேராயுதமாக விளங்குகிறது. இந்நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வழங்குவதற்கு மறுத்து வருகிறது. இதனால் உலக நாடுகளிலிருந்து தடுப்பூசி வரவழைக்க தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. உலகளாவிய சில நிறுவனங்கள் மத்திய அரசுகள் மூலம் மட்டுமே தடுப்பூசி வழங்க முடியும் எனவும், மாநில அரசுகளுக்கு அவ்வாறு வழங்க இயலாது எனவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வற்புறுத்தி பெறுவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாகியுள்ளது.  எனவே, மத்திய அரசு தாமதிக்காமல் தமிழக அரசு கேட்டுள்ள அளவு தடுப்பூசிகளை வழங்கிட வேண்டுமென வற்புறுத்துவதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இக்கோரிக்கையை மத்திய அரசிடம் வற்புறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. 

வெள்ளி, 21 மே, 2021

பல்கலைக்கழக பாடப்புத்தகமா? பாஜகவின் பிரச்சார பிரசுரமா? உண்மைக்கு மாறாக பல்கலைக்கழகப் பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. - கே. பாலகிருஷ்ணன்

 பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கோடும், சிறுபான்மையினரை வன்முறையாளர்கள் என சித்தரித்தும் உண்மைக்கு மாறாக  பல்கலைக்கழகப் பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.