திங்கள், 9 ஆகஸ்ட், 2021

பிரதமர் மோடியும், ஆளும் கட்சியான பாஜகவும் கள்ள மெளனம் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டை விட வெட்கக்கேடானது வேறு ஏதுமில்லை.- கே.பாலகிருஷ்ணன்


 இந்திய, ஹாக்கி பெண்கள் அணியின் ஒலிம்பிக் ஆட்டம், பதக்கக் கனவை நிறைவேற்றவில்லை என்ற போதிலும், நாட்டுக்கே பெருமிதம் தரக்கூடிய ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியது.

ஆனால், ஹேட்ரிக் கோல் அடித்த சாதனைப் பெண் வந்தனாவின் வீட்டிற்கு முன், சாதி ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் போட்ட கூச்சலும், அவமானகரமான நடவடிக்கைகளும் ஏற்கவே முடியாதவையாகும்.

உலக அரங்கில் நம்மை கொண்டாடச் செய்திருக்கும் அந்த பெண்களை, சாதியின் பேரால் வீழ்த்த முயற்சித்திருக்கு இந்த போக்கு சனாதன சித்தாந்தத்தின் கீழ்த்தரமான வெளிப்பாடாகும்.

இப்படிப்பட மோசமான நிகழ்வைக் குறித்து பிரதமர் மோடியும், ஆளும் கட்சியான பாஜகவும் கள்ள மெளனம் கடைப்பிடிக்கிறார்கள். இந்த நிலைப்பாட்டை விட வெட்கக்கேடானது வேறு ஏதுமில்லை.

சாதி வெறிக் கும்பலின் இந்த நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கப்படுவதுடன், கடும் தண்டனை வழங்கப்படுவது அவசியம்.

மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டுச் சொன்னபடி, " ஹாக்கி பெண்கள் அணியை தனிச் சிறப்பாக பாராட்டுவதுடன், அமைச்சர்கள், விளையாட்டு வீரர் வந்தனாவின் வீட்டிற்கு நேரில் சென்று, நாடே உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது என்று காட்ட வேண்டும்". சாதி வெறியை வீழ்த்துவதன் மூலமே, நவீன இந்தியாவை கட்டமைப்பது சாத்தியமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக