வியாழன், 19 ஆகஸ்ட், 2021

நவீன இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தை புதிய தொழில் நிறுவனங்கள் அதிகம் சார்ந்துள்ளன.- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


 நவீன இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தை புதிய தொழில் நிறுவனங்கள் அதிகம் சார்ந்துள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் நவீன இந்தியாவில் தங்கள் முழு திறனை அடைவதற்கும் தொழில் முனைவோர் வெற்றி பெறுவதற்கும், அறிவியல் செயலிகள் மட்டுமில்லாது, அறிவியல் ஆர்வம் மற்றும் அறிவியல் எண்ணமும் அவசியம் என்றார் அவர்.

ஏழாவது இந்திய சர்வதேச சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்றுமதி உச்சி மாநாடு-2021-ல் சிறப்புரை ஆற்றிய அமைச்சர், இந்தியாவில் பெரிய தொழிற்சாலைகளுக்கான அடித்தளமாக போட்டித்திறன் மிக்க மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் விளங்கும் என்றார். வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வெளிப்பாடுகளை தொழிற்சாலைகளுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அறிவியல் சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

எதிர்கால தொழில் முனைதலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வழிநடத்தும் என்று கூறிய அவர், மாறும் காலங்களுக்கேற்ப புதிய தொழில்கள் உருவாக வேண்டும் என்றார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு வேளாண் புது நிறுவனங்கள் பலருக்கு வாழ்வாதாரம் அளிப்பதாக அமைச்சர் கூறினார். 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறைக்கூவல் குறித்து பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், வேளாண், அதை சார்ந்த துறைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கவனம் உற்பத்தி மீது இல்லாமல், உற்பத்தி திறன் மீது இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக