செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

"மிஷன் சாகர்" மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இந்தோனேசியா சென்றடைந்தது ஐஎன்எஸ் ஐராவத் கப்பல்


 இந்தோனேசிய அரசின் தேவையின் அடிப்படையில், திரவ மருத்துவப் பிராணவாயு அடங்கிய 10 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற ஐஎன்எஸ் ஐராவத் கப்பல், ஆகஸ்ட் 24-ஆம் தேதி, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள டன்ஜங் பிரயாக் துறைமுகத்தைச் சென்றடைந்தது.

மருத்துவ உபகரணங்களை விநியோகித்த பிறகு, மிஷன் சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக இதர நட்பு நாடுகளுக்கு மருத்துவ அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்காக ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் தனது பயணத்தைத் தொடரும்.

நீரிலும், நிலத்திலும் இயங்கும் தன்மையுடைய இந்தக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஜூலை 24-ஆம் தேதி திரவ மருத்துவப் பிராணவாயு அடங்கிய 5 கொள்கலன்கள் மற்றும் 300 பிராணவாயு செறிவூட்டிகளை இந்தோனேசியாவிற்கு இதே கப்பல் கொண்டு சென்றது.

இந்தியாவும் இந்தோனேசியாவும் வலுவான கலாச்சார பிணைப்பைக் கொண்டிருப்பதுடன், பாதுகாப்பான இந்திய - பசிபிக் பகுதிக்காக, கடல்சார் துறையில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரு நாடுகளின் கடற்படைகளும் தொடர்ச்சியாக கூட்டுப் பயிற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக