வியாழன், 19 ஆகஸ்ட், 2021

மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடாமல் காது குத்தி தோடும், மூக்குத்தியுமா அணிவிக்க முடியும்? - கார்த்திகேய சிவசேனாபதி


 மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடாமல் காது குத்தி தோடும், மூக்குத்தியுமா அணிவிக்க முடியும்?

நீதிமன்றங்களின் நேரத்தை வீணடிப்பதற்காகவும், அதன் முக்கியத்துவத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலும் தொடரப்படும் இது போன்ற வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், நேரத்தை வீணடிப்பதற்காக அவர்களுக்கு அபராதமும் விதித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காட்டு விலங்குகளாக இருந்த மாடுகள், நாய்கள் என சில உயிரினங்களை வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்தி அதனை நன்முறையில் பேணிப் பாதுகாத்து வரும் பாரம்பரிய பண்பாடு கொண்டவர்கள் தமிழர்கள்.

ஆனால், சமீப காலங்களாக மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடக்கூடாது, லாடம் அடித்தல் கூடாது என்று வழக்கத்தில் இல்லாதவற்றை, நடைமுறைக்கு ஆகாதவற்றைக் கண்டுபிடித்து இது போன்று புதிது புதிதான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு செயல்படுபவர்களின் பின்னணி, அவர்களின் உள்நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றங்களும், மக்களாகிய நாமும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக