திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தேசிய விளையாட்டு தினம், ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


 மத்திய சுரங்கங்கள் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பாக செயல்படும் நாக்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையம், விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, மேஜர் தியான் சந்த், விளையாட்டு உலகிற்கு அளித்த பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரைப் பற்றிய கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது.

நாக்பூரில் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள் இதில் கலந்து கொண்டார்கள். உடல் மற்றும் மனநல ஆரோக்கியத்திற்காக விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றோர் மற்றும் இரண்டாவது இடம் பிடித்தோர் இடையே பேட்மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் கண்காட்சி போட்டிகள் நடைபெற்றன. அன்றாட வாழ்வில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக தேசிய விளையாட்டு தினம், ஜவஹர்லால் நேரு அலுமினியம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் வடிவமைப்பு மையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக