ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தாய் மொழியில் உரையாற்றுவதை மக்கள் பெருமையாகக் கருத வேண்டும்.அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது.- வெங்கையா நாயுடு


 இந்திய மொழிகளை ஊக்குவிக்கவும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றை பொருந்தச் செய்யவும், புதுமையான வழிகளை உருவாக்குமாறு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மொழி என்பது நிலையான கருத்துரு அல்ல என்று குறிப்பிட்ட அவர், மொழிகளை மேலும் வளமாக்க, ஆற்றல் வாய்ந்த மற்றும் ஆக்கபூர்வமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

மொழியின் ‘வாழும் கலாச்சாரத்தை' பாதுகாப்பதற்கு ஓர் மக்கள் இயக்கம் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். கலாச்சாரம் மற்றும் மொழியியல் மறுமலர்ச்சிக்கு மக்களிடமிருந்து மிக அதிகமான ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

தாய் மொழியில் உரையாற்றுவதை மக்கள் பெருமையாகக் கருத வேண்டும் என்று வலியுறுத்திய திரு நாயுடு, அன்றாட வாழ்க்கையில் இந்திய மொழிகளைப் பயன்படுத்துவதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படக்கூடாது என்று தெரிவித்தார்.

வீதி அருகு மற்றும் தென்ஆப்பிரிக்க தெலுங்கு சமூகம் ஏற்பாடு செய்திருந்த ‘தெலுங்கு மொழி தின' நிகழ்ச்சியில் இன்று காணொலி வாயிலாக உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலக்கிய வரலாற்றைக் கொண்டுள்ள தொன்மை மொழியாக தெலுங்குவைக் குறிப்பிட்டு, அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தெலுங்கு எழுத்தாளரும் மொழியியலாளருமான திரு கிடுகு வெங்கட ராமமூர்த்தியின் பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் ‘தெலுங்கு மொழி தினமாகக்' கொண்டாடப்படுகிறது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது குடியரசு துணைத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார். தெலுங்கு இலக்கியத்தை சாமானிய மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையிலான மொழி இயக்கத்திற்கு தலைமை வகித்த அவரது முயற்சிகளை திரு வெங்கையா நாயுடு வெகுவாகப் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக