ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது. அனைவருடனும் இயங்கும் வகையில் திறன் மற்றும் தன்னம்பிக்கையை கட்டமைப்பதே தற்சார்பு இந்தியாவாகும்.- திரு பியூஷ் கோயல்


 தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை நோக்கி அரசு பணியாற்றி வருகிறது. அனைவருடனும் இயங்கும் வகையில் திறன் மற்றும் தன்னம்பிக்கையை கட்டமைப்பதே தற்சார்பு இந்தியாவாகும். தரம், போட்டித் திறன் வாய்ந்த கட்டணம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுடன் அனைவருடனும் கலந்துரையாடும் வகையில் நமது தொழில்துறையை இது மேம்படுத்தும்”, என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளி அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெயின் சர்வதேச வர்த்தக நிறுவனத் தளம் வாயிலாக வர்த்தகம் மற்றும் வணிக துறையினருடன் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாக வணிகர்களும் ஏற்றுமதியாளர்களும் விளங்குவதாக திரு கோயல் குறிப்பிட்டார். அடுத்த 25-30 ஆண்டுகளில் சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியாவை முன்னிலை படுத்தும் வர்த்தக சமூகம் மற்றும் புதிய நிறுவனங்களின் திறன்களின் மீது கொள்கை தயாரிப்பாளர்களாக எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜிசிசி நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏராளமான நாடுகளுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த ஆலோசனைகள் விரைவான முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். வரும் காலத்தில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் இசைவு தெரிவித்துள்ளன என்றார் அவர். உலக நாடுகள், நம்பகத்தன்மை வாய்ந்த கூட்டாளியை தேடிக் கொண்டிருப்பதாகவும், அந்த கூட்டாளி இந்தியாவின் வர்த்தக சமூகம் என்றும் அவர் தெரிவித்தார்.

விரும்பத்தக்க உற்பத்தி மையமாக அமெரிக்காவைப் பின்தள்ளி உலகளவில் இரண்டாவது இடத்திற்கு இந்தியா அண்மையில் வளர்ச்சி பெற்றது. உலகின் “உற்பத்தி முனையமாக” உருவாகும் இந்தியாவின் உறுதித் தன்மை மற்றும் சாத்தியக்கூறுகளை இது எடுத்துரைக்கிறது. உற்பத்தி முனையத்துடன் நாம் வர்த்தக மையமாகவும், அதாவது, பொருட்களை வாங்குவதற்கு உலகம் விரும்பும் பகுதியாகவும் உருவாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக