வியாழன், 19 ஆகஸ்ட், 2021

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் முப்படைகளை சேர்ந்த மகளிர் மலையேற்ற குழு மணிரங் சிகரத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது.


 நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக முப்படைகளை சேர்ந்த மகளிர் மலையேற்ற குழுவின் பயணத்தை 2021 ஆகஸ்ட் 1 அன்று புதுதில்லியில் உள்ள விமானப் படை  நிலையத்தில் இருந்து இந்திய விமானப் படை தொடங்கி வைத்தது.

2021 ஆகஸ்ட் 15 அன்று மகளிர் மலையேற்ற குழு மணிரங் சிகரத்தை வெற்றிகரமாக சென்றடைந்தது. கின்னவுர் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள மணிரங் சிகரம், ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள மிகவும் உயரமான சிகரங்களில் ஒன்றாகும். மணிரங் பாஸுக்கு அருகில் அமைந்துள்ள இச்சிகரம், வாகன சாலை அமைக்கப்படுவதற்கு முன்னர் ஸ்பிடி மற்றும் கின்னவுருக்கிடையேயான முதல் வர்த்தக பாதைகளில் ஒன்றாக இருந்தது.

15 பேர் கொண்ட குழுவுக்கு இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் பாவன மேஹ்ரா தலைமை வகித்தார். லெப்டினெண்ட் கர்னல் கீதாஞ்சலி பத், விங் கமாண்டர் நிருபமா பாண்டே, விங் கமாண்டர் வயோமிகா சிங், விங் கமாண்டர் லலிதா மிஸ்ரா, மேஜர் உஷா குமாரி, மேஜர் சௌம்யா சுக்லா, மேஜர் வீணு மோர், மேஜர் ரச்சனா ஹூடா, லெப்டினெண்ட் கமாண்டர் சினோ வில்சன் மற்றும் ஃபிளைட் லெப்டினெண்ட் கோமல் பஹுஜா உள்ளிட்டோர் குழுவின் இதர உறுப்பினர்கள் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக