செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

வேறு யாரும் செய்யாததையா கே.டி இராகவன் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது. - விடுதலை இராசேந்திரன்

 "நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு மூன்று கேள்விகள்"

 - தோழர் விடுதலை இராசேந்திரன்.

வேறு யாரும் செய்யாததையா கே.டி இராகவன் செய்துவிட்டார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது. 

1) ஒரு கட்சியில் மாநில பொறுப்பாளராக இருக்கக் கூடியவர் அதே கட்சியில் பணியாற்ற வந்த ஒரு பெண்ணுக்கு, தன்னுடைய பொதுச் செயலாளர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய பாலியல் சுரண்டலுக்கு பயன்படுத்துவது எல்லோரும் செய்யக்கூடிய ஒன்றுதானா ?

2) நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 50% இடங்களை பெண்களுக்கு எங்கள் கட்சி தான் வழங்கியது என்று மார்தட்டினார் இவர். பெண்களுடைய சமத்துவத்தை நாங்கள் தான் அங்கீகரிக்கிறோம் என்று இதன்மூலம் பெருமையடித்துக்கொண்டார். அப்படிப்பட்ட இந்த ஒருங்கிணைப்பாளர், தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் அத்தனை பேரும் இவருடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா ?

3) ஈழத்தின் தேசியத் தலைவர் தனக்கு மட்டுமே உரியவர். தான் மட்டுமே அண்ணனாக கொண்டாடுவதற்கு உரிமையுண்டு என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர், 'அந்த தேசியத்தலைவர் இயக்கத்தில் பால் உறவு குற்றங்கள் பற்றிய பிரச்சனைகள் வருகிறபோது எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு'. தேசியத் தலைவரை தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்ட ஒருவர் இப்படி வேறு ஒருவர் செய்யாததையா செய்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? இதுதான் அந்த தேசியத்தலைவருக்கு அவர் காட்டுகிற மரியாதையா ? 

இந்த கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக