ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

விமானப்படையின் விமானியான குரூப் கேப்டன் பெர்மிந்தர் அண்டிலுக்கு ஷௌரிய சக்ரா விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்


 இந்திய விமானப்படையின் விமானியான குரூப் கேப்டன் பெர்மிந்தர்  அண்டில், 2020 ஜனவரி முதல் எஸ்யு-30 ரக விமானத்தில் கமாண்டிங் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். 2020 செப்டம்பர் 21 அன்று திடீரென எஸ்யு-30 ‌ரக விமானத்தில் அதிர்வுகள் ஏற்பட்டு விமானம் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது.

நிலைமையை உணர்ந்து விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியுடன் அசம்பாவிதம் ஏதும் நடைபெற்றால், பொதுமக்கள் அல்லது சொத்துக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக, குரூப் கேப்டன் பெர்மிந்தர்  அண்டில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளுக்கு அப்பால் விமானத்தை இயக்கினார். அவரது துல்லியமான கணிப்பு,  திறமையான விமான ஓட்டும் திறன் மற்றும் சீரிய அறிவால், அதிர்வுகள் குறைந்து விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. அவரது போற்றத்தக்க செயலால் 100 கோடி‌ ரூபாய் மதிப்புமிக்க தேசிய சொத்தும், உயிர்களும் பாதுகாக்கப்பட்டன.

அவரது வீரதீர செயல், தலைசிறந்த தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் வான் பாதுகாப்பில் சீரிய பங்களிப்பிற்காக குரூப் கேப்டன் பெர்மிந்தர்  அண்டிலுக்கு ஷௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக