ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

சென்னையில் உள்ள, இந்திய உணவுக் கழக தென் மண்டல அலுவலகத்தில் சுதந்திரதின விழா


 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தென் மண்டல அலுவலகத்தில், அதன் செயல் இயக்குநர் திரு ஆர்.டி நசீம் ஐஏஎஸ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டுக்கும், இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பெருந்தொற்று நேரத்தில் கடந்த ஒராண்டாக இந்திய உணவுக் கழகம் செய்த பணிகளை அவர் நினைவுக்கூர்ந்தார். தேசிய ஊரடங்கு காலத்திலும், இந்தியக் உணவுக் கழக ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் உணவு தானியங்களை தொடர்ந்து கொள்முதல் செய்து, சேமித்து வைத்து அவற்றை லாரிகள், ரயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினர் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு மண்டலங்கள், ஊரடங்குகள் போன்ற பல தடைகளையும் மீறி ரேசன் கடைகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விநியோகிக்கப்பட்டன.

இதன் காரணமாக பலர் கொரோனா பாதிப்புக்கு ஆளாயினர்.  சில அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பலியாயினர்.

81 கோடி இந்தியர்களுக்கு பொது விநியோக திட்டம் மூலம் வழக்கமான அரிசி மற்றும் கோதுமை விநியோகத்தை இந்திய உணவுக் கழகம் உறுதி செய்ததோடு, பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா மூலம் மக்கள் ஒவ்வொரு மாதமும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் பெற்றனர். சிக்கலான நேரங்களில் மக்கள் பட்டினியுடன் இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்தது.

இந்திய உணவுக் கழகம் செய்த சாதனை இந்தியாவிலும், வெளிநாட்டிலும் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் பாராட்டப்பட்டது.

நமது நாட்டை உணவு மிகை நாடாக மாற்றியதில், விவசாயிகள், விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசின் பங்களிப்பை அவர் நினைவுக் கூர்ந்தார். இதன் காரணமாக நாட்டில் இந்திய உணவுக் கழகங்களின் சேமிப்பு கிடங்குகள் நிறைந்து கிடப்பது மட்டும் அல்லாமல் கூடுதல் உணவு தானியங்களை பல நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்கிறோம். எதிர்காலத்திலும், செழிப்புக்கும், உலகின் மற்ற நாடுகளின் உணவு பாதுகாப்புக்கும் ஜொலிக்கும் உதாரணமாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என திரு ஆர்.டி நசீம் நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக