ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொகந்தி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.


 ராணுவ துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிபி மொகந்தி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது,  எதிர்காலத்தில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராய்வது ஆகியவைதான் இந்த பயணத்தின் நோக்கம்.

ஹவாயில் நடைபெறும் பலதரப்பு பாதுகாப்பு தலைவர்கள் மாநாட்டிலும் ராணுவ துணை தளபதி பங்கேற்கிறார்.  கொரோனா எவ்வாறு தேசிய பாதுகாப்பை மாற்றும்,  தடையற்ற மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் விஷயத்தில் சிறுதரப்பினரின் பங்கு,  தொழில்நுட்பம் மூலமான அச்சுறுத்தல்களின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் ஆகிய மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும். 

இந்த மாநாட்டுக்கு வரும், அமெரிக்க பாதுகாப்பு படைகளின் மூத்த தலைவர்களையும், லெப்டினன்ட் ஜெனரல் சி.பி. மொகந்தி சந்தித்து பேசுவார். 

பிறகு ராணுவ‌ துணை தளபதி, வாஷிங்டன் சென்று மூத்த ராணுவத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.   வீரர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் அலுவலகத்தையும்,  சி.பி.மொகந்தி பார்வையிட்டு புத்தாக்க திட்டங்கள் மற்றும் முறைகளை பார்வையிடுகிறார்.  இந்த சந்திப்புகள் இரு நாடுகள் இடையே ராணுவ அளவிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக