சனி, 18 செப்டம்பர், 2021

பெட்ரபோல் (Petrapole) ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் புதிய பயணியர் முனையக் கட்டிடம் திறப்பு


 விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் இணைப்பை ஊக்குவிப்பது என்ற திரு மோடி அரசின் கொள்கைகளுக்கு இணங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழிகாட்டுதலின் கீழ் செப்டம்பர் 17-ஆம் தேதி பெட்ரபோல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் புதிய பயணியர் முனையக் கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துடனான இந்தியாவின் இணைப்பை மேலும் வலுப்படுத்தவும், எல்லை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கவும் இது மிகச்சிறந்த காரணியாக அமையும்.

இந்தியா மற்றும் வங்கதேச அரசுகளின் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தத் துவக்க விழாவில், மத்திய உள்துறை இணை அமைச்சர்கள் திரு நித்யானந்த் ராய் மற்றும் திரு நிசித் பிரமாணிக் ஆகியோர் கட்டிடத்தைத் திறந்து வைத்தனர். வங்கதேச அரசின்  கப்பல் துறை இணை அமைச்சர் திரு காலித் மஹ்மூத் சவுத்ரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். வங்கதேசத்திற்கான இந்திய தூதர் திரு விக்ரம் துரைசுவாமி முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. இந்திய நில துறைமுகங்கள் ஆணையகத்தின் தலைவர் திரு ஆதித்ய மிஸ்ரா, வங்கதேச நிலத் துறைமுகங்கள் ஆணையகத்தின் தலைவர் திரு முகமது அலம்கிர் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்தியாவும் வங்கதேசமும் அரசியல் ரீதியான உறவின் பொன்விழாவைக் கொண்டாடும் சூழலில், மக்களிடையேயான இணைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான நவீன உள்கட்டமைப்பு வசதிகளை முன்னிறுத்தி, இருதரப்பு உறவை வலுப்படுத்த அனைத்து பிரமுகர்களும் உறுதியளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக