நரேந்திர மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நரேந்திர மோடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 நவம்பர், 2024

பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி

 பகவான் பிர்ஸா முண்டா, நமது சுற்றுப்புறத்தோடு எப்படி வாழ்வது, நமது கலாச்சாரம் குறித்து பெருமிதம் கொள்வது எப்படி என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரால் ஈர்க்கப்பட்டு, அவரது கனவுகளை நிறைவேற்றவும், நமது பழங்குடி சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கவும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். - பிரதமர் நரேந்திர மோடி

திங்கள், 26 டிசம்பர், 2022

வீர பாலகர் தினம், பாஞ்ச் பிராண்ஸ் எனப்படும் ஐந்து தீர்மானங்களுக்கான உயிர் சக்தி போன்றதாகும்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 வீர பாலகர் தினத்தையொட்டி புதுதில்லி மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் இன்று  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது 300 சிறார்கள் பங்கேற்று சப்த கீர்த்தனைகள் பாடிய நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்து கொண்டார்.  சுமார் 3000 குழந்தைகள் பங்கேற்ற அணிவகுப்பையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். குரு கோபிந்த் சிங்கின்  பிரகாஷ் பூரப் தினமான 2022 ஜனவரி 9-ந் தேதி அன்று   ஒரு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர், டிசம்பர் 26-ந் தேதி வீர பாலகர் தினமாக கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். ஸ்ரீ குரு கோபிந்த் சிங்கின் மகன்களான சாஹிப்ஜாதா பாபா ஜோராவர் சிங் மற்றும் சாஹிப்ஜாதா பாபா ஃபதேசிங்கின் தியாகத்தை குறிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சனி, 30 ஜூலை, 2022

கடந்த எட்டு ஆண்டுகளில், நாட்டின் நீதித்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பணிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன.- நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நடைபெற்ற முதலாவது  அகில இந்திய மாவட்ட சட்ட சேவைகள் அதிகாரிகள் கூட்டத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றினார். இந்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி யு.யு.லலித், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவர்கள்  மற்றும் மாவட்ட சட்ட சேவைகள் ஆணையங்களின்  தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 'இலவச சட்ட உதவிக்கான உரிமை' குறித்த நினைவு அஞ்சல் தலையையும் பிரதமர் வெளியிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இது விடுதலையின் அமிர்த கால நேரம். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தீர்மானங்களுக்கான நேரம் இது. எளிதாக தொழில் செய்வது போலவும், எளிதாக வாழ்வது போலவும், நாட்டின் இந்த அமிர்த யாத்திரையில் எளிதாக நீதி கிடைத்தலும் சமமாக முக்கியமானது, என்றார்.

செவ்வாய், 19 ஜூலை, 2022

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.-பிரதமர் திரு நரேந்திர மோடி


 பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் நடைபெற்ற  கடற்படை புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தற்சார்பு அமைப்பின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில்  உரையாற்றினார்.

இந்திய கடற்படையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘ஸ்பிரிண்ட் சேலஞ்சஸ்’ திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.  அப்போது பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்திய பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு கொள்கை  மிக முக்கியமானது என்று கூறினார்.

புதுமை கண்டுபிடிப்புகள் முக்கியமானதாக உள்ள நிலையில், அது உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்களாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

வியாழன், 30 ஜூன், 2022

இந்தியர் ஒவ்வொருவரும் எளிதாக தொழில் தொடங்க முத்ரா திட்டம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. - பிரதமர் திரு. நரேந்திர மோடி


 ‘தொழில்முனைவோர் இந்தியா’ நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘உருவாதல் மற்றும் விரைவுபடுத்தும் எம்எஸ்எம்இ செயல்பாட்டுத்’ திட்டம், முதன்முறை எம்எஸ்எம்இ ஏற்றுமதியாளர்களின் கட்டமைப்புத் திறன் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கல் திட்டம் (பிஎம்இஜிபி) முதல் எம்எஸ்எம்இ துறையை முன்னேற்றுதல் வரையிலான புதிய அம்சங்கள் போன்ற முக்கியமான முன்முயற்சிகளையும் தொடங்கிவைத்தார். 2022-23-க்கான பிஎம்இஜிபி பயனாளிகளுக்கு உதவித் தொகையை டிஜிட்டல் வழியாக அவர் பரிவர்த்தனை செய்துவைத்தார்; எம்எஸ்எம்இ ஐடியா ஹேக்கத்தான் 2022-ன் முடிவுகளையும் அறிவித்தார்; தேசிய எம்எஸ்எம்இ விருதுகளை வழங்கினார்; தற்சார்பு இந்தியா நிதியத்தில் 75 எம்எஸ்எம்இ-களுக்கு டிஜிட்டல் சமபங்கு சான்றிதழ்களை வழங்கினார். மத்திய அமைச்சர்கள் திரு.நாராயண் ரானே, திரு.பானு பிரதாப் சிங் வர்மா, நாடு முழுவதிலும் இருந்து எம்எஸ்எம்இ சம்பந்தப்பட்டவர்கள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

 

சனி, 18 ஜூன், 2022

தமது அன்னை, 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஓர் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவை எழுதியுள்ளார்.


 தமது அன்னை, 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஓர் உணர்ச்சிபூர்வமான வலைப்பதிவை எழுதியுள்ளார். தமது குழந்தைப் பருவத்தில் தாயுடன் செலவிட்ட சில சிறப்பு தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். தாம் வளர்கையில், தமது அன்னை செய்த ஏராளமான தியாகங்களை நினைத்துப் பார்த்த அவர்,  தமது மனம், ஆளுகை மற்றும் தன்னம்பிக்கையை வடிவமைத்த  அன்னையின் ஏராளமான குணங்களைக் குறிப்பிட்டார்.

“எனது தாய் திருமதி ஹீராபா மோடி, தமது 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை பகிர்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இது அவரது நூற்றாண்டு பிறந்த ஆண்டாக இருக்கப் போகிறது”, 

புதன், 15 ஜூன், 2022

ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டுக்கு பிரதமர் தலைமை வகிக்கிறார்.


 இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா பிசிஏ மைதானத்தில் வரும் 16. 17 ஆகிய தேதிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோதி தலைமையில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கிய நடவடிக்கையாக மாநாடு நடைபெறும். 

     15 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில், மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்கள்  உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் அதிவேக நீடித்த பொருளாதார வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தப்படும். இந்தியா ஒரே குழு என்ற உணர்வுடன் நடைபெறும் மாநாடு, நீடித்த உயர் வளர்ச்சி, வேலைகள் உருவாக்கம், கல்வி, எளிதாக வாழுதல், வேளாண்மையில் தற்சார்பு ஆகியவற்றுக்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான தளத்தை உருவாக்கும்.  பொதுவான வளர்ச்சியை செயல்படுத்துதல், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கான திட்டம் ஆகியவற்றை இந்த மாநாடு மதிப்பீடு செய்யும். 

செவ்வாய், 7 ஜூன், 2022

இந்தியா மண்ணைப் பாதுகாப்பதற்கான ஐந்து அம்சத் திட்டத்தைக் கொண்டுள்ளது. - பிரதமர் திரு.நரேந்திர மோடி


 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் கூட்டத்தில் திரண்டிருந்தவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்தார். 'மண்ணைக் காப்போம்' இயக்கத்தைப் பாராட்டிய பிரதமர், விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது, நாடு  புதிய உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இத்தகைய இயக்கங்கள் புதிய முக்கியத்துவம் பெறுவதாகக் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட  முக்கிய திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கோணத்தில் இருப்பதாக அவர் திருப்தி தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கம்,  கழிவுகளிலிருந்து செல்வம் தொடர்பான திட்டம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உபயோகம் குறைப்பு, ஒரு சூரியன் ஒரு பூமி, எத்தனால் கலக்கும் திட்டம் ஆகியவை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் பல பரிமாண முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டுகள் என்று  அவர் சுட்டிக்காட்டினார். 

செவ்வாய், 31 மே, 2022

2014 முதல் நமது நாடு அரசியல் உறுதியை காண்கிறது. சீர்திருத்தங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. - பிரதமர் திரு.நரேந்திர மோடி


 ஐதராபாதில் உள்ள இந்திய வணிகவியல் பள்ளியின் 20 ஆண்டுகள் நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் திரு.நரேந்திர மோடி, 2022-க்கான வணிகவியல் முதுநிலைக் கல்வி பயின்றோருக்கு பட்டமளிக்கும் விழாவில் உரையாற்றினார்.

இந்தக் கல்வி நிறுவனம் தற்போதைய புகழை அடைவதற்கு பங்களிப்பு செய்த அனைவருக்கும் புகழாரம் சூட்டினார். 2021-ல் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இந்தக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்ததை அவர் நினைவுகூர்ந்தார். அதன் பிறகு 50,000-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்திய வணிகவியல் பள்ளியில் பட்டம் பெற்றுள்ளனர். இன்று இந்த நிறுவனம் ஆசியாவிலேயே முதன்மையான வணிகவியல் பள்ளியாக விளங்குகிறது. இங்கிருந்து பட்டம் பெற்றவர்கள் முதன்மையான நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்றும்  நாட்டின் வணிகத்திற்கு ஊக்கமளித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார். இங்கு பயின்ற மாணவர்கள் நூற்றுக்கணக்கான புதிய தொழில்களை தொடங்கி யுனிகார்ன்களை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். “இது ஐஎஸ்பி-ன் சாதனை என்றும், இது ஒட்டு மொத்த தேசத்திற்கு பெருமை சேர்ப்பதாகும்” என்றும் அவர் கூறினார்.

வெள்ளி, 20 மே, 2022

மென்பொருளில் இருந்து விண்வெளியில், புதிய எதிர்காலத்திற்கு தயாராகும் நாடாக நாங்கள் உருவாகி வருகிறோம். - பிரதமர் திரு நரேந்திர மோடி


 வதோதராவின் கரேலிபாக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இளைஞர் முகாமில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். குண்டால்தம் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில், வதோதராவின் கரோலிபாக் ஸ்ரீ ஸ்வாமிநாராயண் கோயில் ஆகியவை இந்த முகாமுக்கு  ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு தலைமுறையிலும் நிலையான குணநலன்களை உருவாக்குவதே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படை என்பதை நமது வேதம் நமக்குக் கற்பித்துள்ளது என்றார். இன்று நடத்தப்படும் முகாம், இளைஞர்களிடையே நல்லெண்ணங்களை  உருவாக்குவதற்கான முயற்சி மட்டுமல்லாமல், சமூகம், அடையாளம், பெருமை மற்றும் தேசத்தின் மறுமலர்ச்சிக்கான ஒரு புனிதமான மற்றும் இயற்கையான பிரச்சாரமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

வியாழன், 19 மே, 2022

உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை–2018க்கான திருத்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 


உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை–2018க்கான  திருத்தங்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயிரி எரிபொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, நாடுமுழுவதும் 01.04.2023 முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன

திங்கள், 16 மே, 2022

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்வதற்கு அரசு ஊழியர்கள் தாங்களாகவே திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்


 அரசு ஊழியர்களுக்குத் திறனைக் கட்டமைப்பது மற்றும் ஊழியர்களின் மனநிலையை, வழிமுறையை, திறனை நவீனமாக மாற்றுவது ஆகிய திசையில் முதல் முயற்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டமான கர்மயோகி இயக்கத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக அலுவலர்களுக்குத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அண்மையில் இந்திய வணிகப் பள்ளி(ஐஎஸ்பி)யுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

சனி, 23 ஏப்ரல், 2022

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

 


தேசிய பஞ்சாயத்து ராஜ் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 2022 ஏப்ரல் 24 அன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்துக்கும் அவர் செல்லவிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது ரூ. 20,000 கோடி மதிப்பிலான பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் பின்னர் மாலை 5 மணி அளவில் மும்பையில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இங்கு அவர் முதலாவது லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதினைப் பெற்றுக் கொள்வார்.

ஜம்மு-காஷ்மீரில் பிரதமர்

ரூ 3 ஆயிரத்து 500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாணி கால் குவாசி கண்ட் சாலையில் கட்டப்பட்டுள்ள சுரங்க பாதையையும் பிரதமர் திறந்து வைப்பார் 8.45 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை வாணி கால் குவாசி கண்டு இடையேயான தூரத்தை 16 கிலோ மீட்டர் அளவுக்கு உழைக்கும் மேலும் பயண நேரமும் சுமார் ஒன்றரை மணி நேரம் குறையும் இது இரட்டை சுரங்கப்பாதை யாகும் ஒன்று இரு வழிகளிலும் பயணம் செய்வதற்கான து இவற்றில் 500 ஒவ்வொரு 100 மீட்டருக்கும் மீட்டர் தூரத்திலும் ஒன்றை ஒன்று கடந்து செல்லும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட சாலைகளாக இருக்கும் பராமரிப்பு மற்றும் அவசரகால வெளியிட்டதற்காக இந்த சுரங்கப்பாதை ஜம்மு விற்கும் காஷ்மீருக்கும் இடையேயான இடையே அனைத்து பருவத்திலும் தொடர்பை ஏற்படுத்த உதவும் இந்த இரண்டு பகுதிகளையும் நெருக்கமாக கொண்டு வரும்

ரூ 7,500 கோடி செலவில் கட்டப்படவுள்ள தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா என மூன்று விரைவுசாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இவை தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா ஆறுவழி விரைவுப்

பாதைக்கான நான்கு வழிப் பாதை இணைப்பாக இருக்கும்

தேசிய நெடுஞ்சாலை 44ல் உள்ள பல்சுவாவிலிருந்து குர்ஹா பைல்தரன், ஹிராநகர்; குர்ஹா பைல்தரன், ஹிராநகரிலிருந்து ஜாக், விஜய்பூர்; ஜாக், விஜய்பூரிலிருந்து குஞ்வினி, ஜம்மு என இருக்கும் இந்தப் பாதை ஜம்மு விமானநிலையத்தை இணைக்கும்.

ராட்லே மற்றும் க்வார் புனல் மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 5,300 கோடி செலவில் 850 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட ராட்லே புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கிஷ்த்வார் மாவட்டத்தின் செனாப் ஆற்றின் குறுக்கே ரூ. 4,500 கோடி செலவில் 540 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட க்வார் புனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மின் தேவைகளை எதிர்கொள்ள இந்த இரு திட்டங்களும் உதவும்.

பாலியில் 500 கிலோ வாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தையும் அவர் தொடங்கி வைப்பார். இதன் மூலம் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத முதலாவது பஞ்சாயத்தாக இது மாறியிருக்கிறது.

ஸ்வமிதா அட்டைகளைப் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கவிருக்கிறார். பல்வேறு வகைகளில் சாதனைகள் புரிந்ததற்கு விருதுகளை வென்றுள்ள பஞ்சாயத்துகளுக்குப் பரிசுத் தொகையை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தன்று அவர் பரிவர்த்தனை செய்துவைப்பார். இந்தப் பகுதியின் கிராமப்புற பாரம்பரியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இன்டாக் புகைப்பட காட்சிக் கூடத்திற்கும் செல்லவிருக்கும் பிரதமர், ஊரகத் தொழில்துறை அடிப்படையில் மாதிரியாக வடிவமைக்கப்பட்டுள்ள நோக்கியா ஸ்மார்ட்பூருக்கும் செல்வார்.

நீர்நிலைகள் புனரமைப்பு செய்யப்படுவதை உறுதி செய்யும் விதமாக ஜம்மு-காஷ்மீர் பயணத்தின்போது அமிர்த சரோவர் எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 நீர்நிலைகளை உருவாக்குதல் அல்லது புனரமைத்தல் என்பதை இது நோக்கமாகக் கொண்டது. இது சுதந்திரத்தின் 75வது ஆண்டுப் பெருவிழாவை நோக்கிய அரசின் மற்றொரு சிறப்பு திட்டமாகும்.

மும்பையில் பிற்பகல் ஐந்து மணி அளவில் மாஸ்டர் தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பார். இந்த நிகழ்ச்சியில் பிரதமருக்கு முதலாவது லதா மங்கேஷ்கர் விருது வழங்கப்படும். பாரதரத்னா லதா மங்கேஷ்கர் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த விருது தேசக் கட்டுமானத்திற்கு தலைசிறந்த பங்களிப்பு செய்த தனி நபர் ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழங்கப்படும்.


செவ்வாய், 22 மார்ச், 2022

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்.


 இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள்.  அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர். 

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் திரு மோடி கூறினார்.  2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதலாவது காணொலிக் காட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

செவ்வாய், 8 மார்ச், 2022

இந்த பட்ஜெட்டின் உயர் வளர்ச்சி வேகத்தை பராமரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 'வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இது பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய 10-வது கருத்தரங்காகும்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த பிரதமர், முற்போக்கான பட்ஜெட்டை அளித்த பெண் நிதி அமைச்சரை இந்தியா கொண்டுள்ளது என்று கூறினார். 

திங்கள், 7 மார்ச், 2022

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பாதி இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளோம்.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். பொது மருந்துகளின் பயன்பாடு மற்றும் மக்கள் மருந்தகத்  திட்டத்தின்  நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. "மக்கள் மருந்தகம், மக்கள் பயன்பாடு" என்பது இந்த வார விழா நிகழ்வின் கருப்பொருள் ஆகும்.

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 4 மார்ச், 2022

தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் உற்பத்தி என்பதற்கு பல முக்கிய அம்சங்களை பட்ஜெட் கொண்டிருக்கிறது.- பிரதமர் திரு நரேந்திர மோடி


 தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை (டிபிஐஐடி) ஏற்பாடு செய்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். பிரதமரால்  உரை நிகழ்த்தப்பட்ட பட்ஜெட்டுக்குப் பிந்தைய எட்டாவது இணையவழிக் கருத்தரங்காகும் இது.  இந்தக் கருத்தரங்கிற்கு  உலகத்துக்காக இந்தியாவில் உற்பத்தி என்பது மையப் பொருளாக இருந்தது.

வியாழன், 3 மார்ச், 2022

வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவது எவ்வாறு என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி

 


பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர், “பட்ஜெட்டின் வெளிச்சத்தில் இதில் உள்ள அம்சங்களில் விரைவாகவும், தடையின்றியும், அதிகபட்ச பயனுடனும் நாம் எவ்வாறு அமலாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியாகும் இது” என்றார்.

செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

இந்திய இளைஞர்கள் தங்களின் புதிய தொழில்களைத் தொடங்கி உலகின் மூன்று முதல் நிலை புதிய தொழில் தொடங்கும் இடங்களில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளனர்.- திரு நரேந்திர மோடி


 நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் நிகழ்த்திய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி, பதில் அளித்து உரை நிகழ்த்தினார். “சுதந்திரத்தின் 100 ஆண்டுகளைக் கொண்டாடும் போது அதனை எங்கே, கொண்டு செல்லவிருக்கிறோம், எப்படிக் கொண்டு செல்லவிருக்கிறோம் என்பதை சிந்திப்பதற்கு இது மிகவும் முக்கியமான நேரம்” என்று பிரதமர் கூறினார். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கூட்டான பங்களிப்பும், கூட்டான உரிமை ஏற்பும், அவசியம் என்பதிலும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகம் இன்னமும் கொவிட்-19-வுடன் போராடி வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இது போன்ற சவால் எதையும் மனிதகுலம் கண்டதில்லை.  இந்திய மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல மற்றவர்களையும் பாதுகாப்பதற்குத்தான். உலகளவில் ஏராளமான தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களுக்கு இடையே இந்த செயல் போற்றுதலுக்குரியது.

வெள்ளி, 28 ஜனவரி, 2022

பாரம்பரியத்துடன் கூடிய இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அனைவருக்குமான முயற்சிகள் சேர்க்கப்பட வேண்டும்.- பிரதமர் திரு.நரேந்திர மோடி


 இந்திய சாஸ்திரிய சங்கீதத்தின் நிபுணரான பண்டிட் ஜஸ்ராஜ் பிறந்த நாளான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டினார். பண்டிட் ஜஸ்ராஜின் நித்தியமான இசை ஆளுமை பற்றி குறிப்பிட்ட பிரதமர், அவரது பெருமைமிகு பாரம்பரியத்தை பண்டிட் சாரங் தேவ் உயிர்ப்புடன் வைத்திருப்பதாக தெரிவித்தார். பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளை தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமர் உரையாற்றினார்.

இந்திய இசை பாரம்பரிய வல்லுனர்கள் வெளியிட்ட விசாலமான ஞானம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். இசையின் மகத்துவத்தை உணரும் ஆற்றல் குறித்து குறிப்பிட்ட திரு.மோடி, இந்த வகையில் இந்தியாவின் சாஸ்திரிய இசை பாரம்பரியம் மிகச் சிறப்பானது என்று கூறினார். “இசை நமது உலகளாவிய கடமைகளை தெரிந்து கொள்ள வைக்கும் ஊடகமாகவும், உலகப் பற்றுகளை கடக்க உதவுகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.