திங்கள், 16 மே, 2022

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்வதற்கு அரசு ஊழியர்கள் தாங்களாகவே திறனை வளர்த்துக் கொள்வது அவசியம்


 அரசு ஊழியர்களுக்குத் திறனைக் கட்டமைப்பது மற்றும் ஊழியர்களின் மனநிலையை, வழிமுறையை, திறனை நவீனமாக மாற்றுவது ஆகிய திசையில் முதல் முயற்சியாகப் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டமான கர்மயோகி இயக்கத்தின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக அலுவலர்களுக்குத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அண்மையில் இந்திய வணிகப் பள்ளி(ஐஎஸ்பி)யுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

ஹைதராபாத் மற்றும் மொகாலியில் உள்ள ஐஎஸ்பி வளாகங்களில் உறைவிட பயிற்சியாக ஐந்து நாட்களுக்கு விரிவான பயிற்சியை மொத்தம் 120 அதிகாரிகள் பல பிரிவுகளில் பெற்றனர். மொகாலியில் உள்ள ஐஎஸ்பி வளாகத்தில் முதல் தொகுப்பாக 30 அதிகாரிகள் தங்களின் பயிற்சியை நிறைவு செய்தனர். இவர்களுக்குப் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சூழலைக் கட்டமைப்பதற்கு நிர்வாகத்தின் பங்களிப்பு குறித்து சிபிசி நிர்வாக உறுப்பினர் திரு பர்வீன் பர்தேசி முழுமையான விரிவுரையாற்றினார்.

இந்த மேம்பாட்டுத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சக செயலாளர் திரு ராஜேஷ் அகர்வால், இந்தியா வல்லரசாக மாறுவதற்கு முயற்சி செய்துவரும் நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வ பங்களிப்பு செய்வதற்கு அரசு ஊழியர்கள் தாங்களாகவே திறனை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றார்.

கட்டமைப்பு பயிற்சிக்கான முக்கிய நோக்கங்கள், இந்தியத் திறன் மேம்பாட்டு சேவை அதிகாரிகளுக்குத் திட்டங்களை ஊக்குவித்தல்; திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகப் பெண் ஊழியர்களுக்குத் தற்காப்புக் கலை பயிற்சி அளிப்பது; திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் 765 அதிகாரிகளுக்கு மன அழுத்தத்தை சமாளிக்க 5 நாள் மனவளக்கலை பயிற்சி; நிர்வாகம் மற்றும் தலைமைத்துவ கட்டமைப்புக்கு 120 அதிகாரிகளுக்குப் பயிற்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக