புதன், 25 மே, 2022

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை கூட்டுப்பயிற்சி போங்கோசாகர் தொடங்கியது

இந்தியா-பங்களாதேஷ் கடற்படை இடையேயான மூன்றாவது போங்கோசாகர் கூட்டுப்பயிற்சி பங்களாதேஷில் உள்ள மோங்கலா துறைமுகத்தில் மே 24, 2022-ல் துவங்கியது. துறைமுகப் பயிற்சி மே 24, 25 ஆகிய நாட்களிலும், அதைத் தொடர்ந்து கடற்பயிற்சி வங்கக்கடலின் வடக்குப் பகுதியில் மே 26, 27 ஆகிய நாட்களிலும் நடைபெறுகிறது.  இருநாட்டு கடற்படையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் போங்கோசாகர் கூட்டுகடற்படை பயிற்சி நடைபெறுகிறது.

இந்திய கடற்படை கப்பல் கோரா, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஏவுகணை போர்க் கப்பலான கொர்வெட், கடற்படை ரோந்து கப்பலான சுமேதா ஆகியவை பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.  பங்களாதேஷ் கடற்படை தரப்பில் அபு உபைதா, அலி ஹைதர் ஆகிய போர்கப்பல்கள்
பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக