சனி, 14 மே, 2022

கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும்.- அஷ்வினி வைஷ்ணவ்



நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும். பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், இன்று மையப்படுத்தப்பட்ட வழி உரிமை அனுமதிகளுக்கான (www.sugamsanchar.gov.in) “விரைவு சக்தி சஞ்சார்” வலைதளத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பச் செயலாளர்கள் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்; பிபிஎன்எல், பாரதி ஏர்டெல் லிமிடெட், பிஎஸ்என்எல்/எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஸ்டெர்லைட், வோடோபோன் போன்ற பல்வேறு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களின் (TSPs) தலைமை செயல் அதிகாரிகள், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குடிமகனுக்கும் அகண்ட அலைவரிசை உள்கட்டமைப்பை ஒரு முக்கிய பயன்பாடாக வழங்குதல், தேவைக்கேற்ப நிர்வாகம் மற்றும் சேவைகள் மற்றும் குறிப்பாக, நமது குடிமக்களின் டிஜிட்டல் அதிகாரமளிக்கும் வகையில், தேசிய அகண்ட அலைவரிசை இயக்கத்தின்  பார்வைப் பகுதிகளைக் கருத்தில் கொண்டு இந்த வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய அகண்ட அலைவரிசை மிஷன் (NBM) டிசம்பர் 17, 2019 அன்று தொலைத்தொடர்புத் துறையால் (DoT)  உருவாக்கப்பட்டது; நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகலை எளிதாக்கும் நோக்கத்தை நிறைவேற்ற, நாடு முழுவதும் டிஜிட்டல் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மென்மையாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பின் முதுகெலும்பை உருவாக்குவது அவசியம். அதை உறுதி செய்ய, DoT, “விரைவு சக்தி சஞ்சார்” தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தேசிய டிஜிட்டல் தொடர்பு கொள்கை-2 இல் திட்டமிடப்பட்டுள்ள "அனைவருக்கும் அகண்ட அலைவரிசை " என்ற இலக்கை அடைவதற்கான வலுவான வழிமுறையை வழங்கும்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தொலைத்தொடர்பு துறை அமைச்சர்  “இந்த தளம், பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புப் பணிகளுக்கான “வணிகம் செய்வதை எளிதாக்குதல்” என்ற நோக்கத்தை செயல்படுத்தும் வகையில் இயங்கும். பல்வேறு சேவை மற்றும் உள்கட்டமைப்பு வழங்குநர்களின் விண்ணப்பங்களுக்கு சரியான நேரத்தில் தீர்வு காணும் வகையில், விரைவான உள்கட்டமைப்பு உருவாக்கத்தை செயல்படுத்துகிறது, இது 5ஜி நெட்வொர்க்கை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கும் உதவும்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக