வியாழன், 27 மே, 2021

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி , பழங்களை அவரவர் இல்லங்கள் அருகே வழங்குவது போல் நியாயவிலை கடையின் மூலம் அத்தியாவசிய பொருள்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

 


நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி , பழங்களை அவரவர் இல்லங்கள் அருகே வழங்குவது போல் நியாயவிலை கடையின் மூலம் அத்தியாவசிய பொருள்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி , பழங்கள் போன்றவை அவரவர் இல்லங்கள் அருகேயே 10 பொருள்கள் அடங்கிய காய்கறி தொகுப்பாக விற்பனை செய்யப்படுகிறது . 

கொரோனாவை கட்டு படுத்த எடுத்த ஊடரங்கு நடவடிக்கையால் தற்பொழுது தொற்று எண்ணிக்கையும் , இறப்பு எண்ணிக்கையும் குறைந்து வருவதாக பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சியில் செய்திகள் வருகிறது . 

இன்று முதல் அனைத்து ரேசன் கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை திறந்து இருக்கும் . 

அச்சமயத்தில் நிவாரணத் தொகை ரூ .2,000 வாங்காதவர்கள் வாங்கிகொள்ளலாம் என்றும் இந்த மாத பொருள்களையும் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவத்து இருக்கிறது . 

தளர்வில்லாத ஊரடங்கை அறிவித்துவிட்டு மறுபுரம் நியாயவிலை கடையில் பொருள்கள் பெறுவதற்காக தளர்வுகளை அறிவிப்பது , கொரோனா பரவலை மேலும் அதிகரிக்குமே தவிர , எந்தவிதமான கட்டுக்குள்ளும் வராது . 

ஆகவே தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலம் எப்படி காய்கறிகளை அரசு விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளதோ அதேபோல் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நேரடியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேவையான பொருள்களை தொகுப்பாக வழங்க வேண்டும் . 

அதோடு நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும் . 

ஒவ்வொறு பகுதிக்கும் எந்தந்த தேதிகளில் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று முன்னரிவிப்பாக கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டால் சுலபமாகவும் இருக்கும் , பயனுள்ளதாகவும் இருக்கும் . 

இதனால் நோய் தொற்றும் ஏற்படாது , ஏழை , எளிய , மக்களுக்கும் தேவையான இன்றியமையாத பொருள்கள் அவரவர் வீடுகளுக்கு அருகேயே கிடைக்கும் . 

இதனால் அனைவரும் பயன்பெறுவார்கள் . தமிழக அரசு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு கலந்தாலோசித்து நிறைவேற்ற ஆவண செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக