செவ்வாய், 25 மே, 2021

சமையல் எண்ணெய் விலைகளின் நிலைத்தன்மை குறித்த பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனைக் கூட்டம்

 சமையல் எண்ணெய் விலைகளின் நிலைத்தன்மை குறித்த பிரச்சனையை எதிர்கொள்வது தொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடன் மத்திய அரசு இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பங்கேற்றன.

சமையல் எண்ணெய்களை ஏற்புடைய விலையில் வழங்குவதை உறுதி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.

சமையல் எண்ணெயின் விலை ஏற்றம் குறித்து நடைபெற்ற இந்த முதல் கூட்டத்தில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர், வேளாண் அமைச்சக செயலாளர், நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர், சமையல் எண்ணெய் விதைகளின் உற்பத்தியாளர்கள், சமையல் எண்ணெய் துறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அமைப்புகள், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர், சமையல் எண்ணெய்களின் விலை ஏற்றத்திற்குக் காரணமான விஷயங்களை ஆராய்வதும், இந்தப் பிரச்சனையில் முறையான உத்திகளை வகுப்பதற்காக இதுதொடர்பாக அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசிப்பதும் அவசியம் என்று கூறினார்.

கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலையை விட இந்திய விலை அதிகரித்திருப்பதையும் கருத்தில் கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

சமையல் எண்ணெய்களை ஏற்புடைய விலையில் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு உறுதி பூண்டிருப்பதால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தங்களது கருத்துக்களை அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக