புதன், 26 மே, 2021

கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் பயனாளிகளுக்கு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் கீழ் 1062 லட்சம் மெட்ரி டன் உணவு தானியம் விநியோகித்து வருகிறது.


 

பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் 100% இலவச உணவு தானியங்களை 31 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் எடுத்து சென்றன

தற்போதைய கொவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் பயனாளிகளுக்கு உணவு தானியங்கள் வழங்கும் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டம் மிகப் பெரிய நிவாரணத்தை அளித்து வருகிறது.

2021 மே 24 வரை, அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 48 லட்சம் மெட்ரிக் டன் இலவச உணவு தானியங்களை இந்திய உணவு கழகம் விநியோகித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், லட்சத்தீவு, புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மே-ஜூன் 2021-க்கான மொத்த ஒதுக்கீட்டையும் எடுத்து சென்று விட்டன.

அந்தமான் & நிகோபார் தீவுகள், அசாம், சண்டிகர், சத்தீஸ்கர், டாமன் டையு தாத்ரா & நாகர் ஹவேலி, கோவா, குஜராத், ஹரியான, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மிர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, லடாக், மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட 26 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் 2021 மே மாதத்திற்கான மொத்த ஒதுக்கீட்டையும் எடுத்து சென்று விட்டன.

உணவு தானியங்கள் நாடு முழுவதும் தொய்வின்றி சென்று சேருவதற்காக, சரக்கு போக்குவரத்தை இந்திய உணவு கழகம் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில், 2020 மார்ச் 25-ம் தேதியில் இருந்து, மொத்தம் 1062 லட்சம் மெட்ரி டன் உணவு தானியங்களை அரசின் பல்வேறு திட்ட்ங்களின் கீழ் இந்திய உணவு கழகம் விநியோகித்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக