ஞாயிறு, 30 மே, 2021

அனைத்து அரசு பணியாளர்களும் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தல்


 அனைத்து அரசு பணியாளர்களும் விரைந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவுறுத்துகிறது என்று வடக்கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு முடிவு செய்ததில் இருந்து, தடுப்பு மருந்து பெற்றுக்கொள்ள அரசு பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த அவர், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக துறையின் அனைத்து பிரிவுகள், அறைகள், பகுதிகள் மற்றும் இதர இடங்களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பணிபுரியும் இடங்களில் கண்ணாடி மூலம் தடுப்புகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும், கார்களில் ஒட்டுநர் இருக்கை மற்றும் பின்னிருக்கைக்கு இடையே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள துறையின் பணியாளர்களுக்கு தேவையான உதவியை வழங்குவதற்காக வீ கேர் எனும் வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக