ஞாயிறு, 30 மே, 2021

கோவா உதய தினத்தை முன்னிட்டு, பழைய கோவாவில், இரண்டாவது மிதக்கும் படகுத்துறையை கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.


கோவா உதய தினத்தை முன்னிட்டு, பழைய கோவாவில், இரண்டாவது மிதக்கும் படகுத்துறையை கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து இணையமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவா  முதல்வர் திரு பிரமோத் சாவந்த், ஆயுஸ் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பழைய கோவா பகுதியில் உள்ள இந்த மிதக்கும் படகுத்துறை, கோவா சுற்றுலாத்துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என  அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா நம்பிக்கை தெரிவித்தார். படகு போக்குவரத்து சேவைகள் மூலம் பன்ஜிம் மற்றும் பழைய கோவா ஆகியவை இணைக்கப்படும் என அவர் அறிவித்தார். இந்த மிதக்கும் படகுத்துறை, சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான, தடைகள் அற்ற போக்குவரத்தை அளிக்கும் என அமைச்சர் கூறினார்.

பழைய கோவா மற்றும் பன்ஜிம் பகுதிகளை இணைக்க மாண்டோவி ஆற்றில் 2 கான்கிரீட் படகுத் துறைகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கு முன்பு, முதல் மிதக்கும் படகுத்துறை பன்ஜிம் பகுதியில் கடந்த பிப்ரவரி 21ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது மாண்டோவி ஆற்றில் 2வது மிதக்கும் படகுத்துறை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக