ஞாயிறு, 30 மே, 2021

காதி கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 45 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது.

கொவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்காதி கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 45 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது.

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம்இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியா ஆகியவற்றிடம் இருந்து இந்த கொள்முதல் ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது.

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட 6.38 லட்சம் மீட்டர் பாலி காதி துணிக்கான ஆர்டர்ரூபாய் 20.60 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் மீட்டர் பாலி காதி துணிக்கான ஆர்டராக விரிவு படுத்தப்பட்டுள்ளதுரூபாய் 19.50 கோடி மதிப்பிலான கொள்முதல் ஆர்டர்களை இந்திய ரயில்வே காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்திற்கு வழங்கியுள்ளதுரூபாய் 4.19 கோடி மதிப்பிலான 1.10 லட்சம் பயன்பாட்டு பொருட்களை ஏர் இந்தியா வாங்க உள்ளது.

இவற்றின் மூலம் நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காதி அமைப்புகளில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளபல்வேறு விதமான பொருட்களை தயாரிக்கும் கைவினைக் கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.

இது குறித்து பேசிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் திரு வினய் குமார் சக்சேனாகொவிட்-19 பெருந்தொற்றின் சோதனையான காலகட்டத்தில் இத்தகைய மிகப்பெரிய ஆர்டர்கள் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும் ஆணையத்தின் முயற்சிகளுக்கு வலுவூட்டுவதோடுதற்சார்பு இந்தியா கனவையும் நிறைவேற்றும் என்று கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக