ஞாயிறு, 30 மே, 2021

பிரதமர் திரு.நரேந்திர மோடி அரசின் 7 ஆண்டுகள் நிறைவு: ஜம்முவில் 7 பஞ்சாயத்துகளில் கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்


 பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 7 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் 7 பஞ்சாயத்துகளில் நடந்த கொவிட் சேவா நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோருக்கு ரேஷன் பொருட்கள், கிருமிநாசினிகள், முகக்கவசங்கள், மற்றும் இதர நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் முக்கிய தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜித்தேந்திர சிங், ‘‘அந்தியோதயா என்ற உண்மையான உணர்வுடன், கடைசி வரிசையில் உள்ள கடைசி மனிதருக்கும் பலன் கிடைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 7 ஆண்டுகளில், மக்களுக்கு ஆதரவான பல வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகளை எடுத்தார்’’  என கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் பதவியேற்ற போது, அது அவநம்பிக்கையிலிருந்து, நம்பிக்கை நோக்கிய புதிய பயணத்தின் ஆரம்பமாக இருந்தது என்றும், அவரது தலைமை மற்றும் வழிகாட்டுதல் முன்னேற்றமான வளர்ச்சிக்கு வழிகாட்டியதாகவும் அவர் கூறினார்.

135 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் கொவிட்-19 போராட்டத்துக்கு குறுகிய நோக்கங்களை கடந்து, போர்க்கால அடிப்படையில் பணியாற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் நெருக்கடியை நாம் சந்திப்பதால், இது விமர்சனத்தில் ஈடுபடுவதற்கான தருணம் இல்லை என்றும், ஒருங்கிணைந்த தீர்மானத்துடன்  செயல்பட்டால்தான், கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் நாம் வெற்றி பெற முடியும் என அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார்.  

ஜம்முவில் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும் போது,  தனது தொகுதியில் உள்ள 6 மாவட்டங்களில் கொவிட் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இங்கு ஆக்ஸிஜன் ஆலைகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன் படுக்கைகள் கிடைக்கின்றன எனவும் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக