ஞாயிறு, 30 மே, 2021

சிஎஸ்ஐஆர் (CSIR) - சிஎம்ஈஆர்ஐ (CMERI) உருவாக்கிய ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பம் குறித்த இணைய கருத்தரங்கம்.


 சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கிய ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பம் குறித்த இணைய கருத்தரங்கம், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு கிளையுடன் இணைந்து 2021 மே 29 அன்று நடத்தப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் தொடர்புடைய சமூகத்தினருக்காக இது ஏற்பாடு செய்யப்பட்டது.

முக்கிய பேச்சாளராக கலந்து கொண்ட சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ இயக்குநர், பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி, சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கிய ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்தும், எதிர்கால திட்டம் குறித்தும் பேசினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் டாக்டர் ஏ கே ரவிகுமார், தலைவர் டாக்டர் பி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த இணைய கருத்தரங்கில் 75-க்கும் அதிகமான மருத்துவர்கள், மருத்துவம் தொடர்புடைய பணியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பேசிய பேராசிரியர் ஹரிஷ் ஹிரானி, மாற்று முறையின் மூலம் சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பத்தின் மூலம் சிறு மருத்துவமனைகள் மற்றும் மையங்கள் பயன்பெறலாம் எனவும், இதனால் பெரிய மருத்துவமனைகளின் மீது ஏற்படும் சுமை குறையும் என்றும் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பத்தின் இன்னும் மேம்பட்ட வடிவத்தின் மீதான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வரவேற்புரை ஆற்றிய இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு செயலாளர் டாக்டர் ஏ கே ரவிகுமார், ஆக்சிஜன் கிடைக்காமல் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பான ஆக்சிஜன் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

தொழில்நுட்பத்தின் மூலம் ஆக்சிஜன் வீணாதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறிய இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு தலைவர் டாக்டர் பி ராமகிருஷ்ணன்,  சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பம் ஒரு மிகச் சிறப்பான முயற்சி என்று கூறினார்.

சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உருவாக்கியுள்ள ஆக்சிஜன் மேம்படுத்தல் தொழில்நுட்பத்தை பாராட்டிய திரு எஸ் எஸ் பாபுஜி, இயக்குநர், எம்எஸ்எம்ஈ-டிஐ, சென்னை, இத்தொழில்நுட்பத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்படுத்த தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் தலைவர் திரு கைலாஷ் காந்த், சிஎஸ்ஐஆர்-சிஎம்ஈஆர்ஐ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இத்தொழில்நுட்பத்தை ஊரக பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கான தமது அவாவை வெளிப்படுத்தினார்.

தொழில்நுட்பத்தை பாராட்டிய இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு கிளையின் முன்னாள் தலைவர் டாக்டர் வி வரதராஜன், கார், பேருந்து அல்லது ரயிலில் பயனிக்கும் போது இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்றார்.

தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மருத்துவர்கள் பேராசிரியர் ஹரிஷ் ஹிரானியையும், அவரது குழுவினரையும் பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக