ஞாயிறு, 30 மே, 2021

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


 
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 'ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின்கீழ் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் (30.05.2021) கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கழகத்தின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10,17,620 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 500 மி.லி சமையல் எண்ணெய், 500 கிராம் பருப்பு, 500 கிராம் சர்க்கரை, 1 கிலோ உப்பு, 250 கிராம் மஞ்சள், 100 கிராம் டீ தூள் ஆகிய 7 வகையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார்கள்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 300 முன்களப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வின் போது, மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக