கொரோனா தொற்றால் குழந்தைகளை விட்டுவிட்டு உயிரிழந்த பெற்றோர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்து இருந்தால் அவற்றை சட்டரீதியாக பாதுகாத்து உரிய காலத்தில் அவர்களுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும்.
கொரோனா என்ற கொடிய நோயின் தாக்குதலுக்கு ஆளாகி பலர் மரணத்தை தழுவியுள்ளனர் .
அப்படி மரணம் அடைந்தவர்கள் பெற்ற குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர்கள் இருவரும் மரணமடைந்து இருக்கிறார்கள் . அப்படி பெற்றோர்கள் இருவரையும் இழந்து தவிக் குழந்தைகளுக்கு ரூ .10 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருக்கிறது .
தமிழ்நாடு அரசு இவ்விசியத்தில் பெற்றோர்களில் ஒருவரை , ஆதாவது தாயையோ , தந்தையையோ இழந்து இருந்தால் , உயிரோடு இருக்கும் பெற்றோருக்கு ரூ .3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் பெற்றோர்கள் இருவரையும் இழந்து இருந்தால் ரூ .5 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறது .
பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை பராமரிக்கின்ற , பாதுகாக்கின்ற உறவினர்கள் அல்லது காப்பாளருக்கு மாதம் ரூ .3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் .
அந்த குழந்தைகளுக்கான கல்வி செலவையும் அரசே ஏற்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .
மனித நேயமிக்க மத்திய , மாநில அரசுகளின் இந்த அறிவிப்புகள் மிகுந்த வரவேற்கதக்கவை .
இச்சூழலில் மறைந்துவிட்ட பெற்றோர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருக்கலாம் .
அச்சொத்துக்களை சரியாக கணக்கிட்டு கண்காணித்து அக்குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் போது அவர்களிடம் , ஓப்படைக்கின்ற சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .
அடுத்ததாக அரசு வழங்கும் நிவாரணத் தொகை வங்கியில் நிரந்தர வைப்பு தொகையாக வைக்கப்படும் தொகைக்கு மற்றவர்களுக்கு வழங்கும் வட்டியை விட , ஆதாவது முதியோர்களுக்கு வழங்குவது போல , கூடுதல் வட்டி விகிதம் வழங்க வேண்டும் .
அதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய ரிசர்வு வங்கி அளிக்க வேண்டும் .
மேலும் பெற்றோர்களை இழந்த அக்குழந்தைகளை பராமரித்தல் , பாதுகாத்தல் மற்றும் கல்வியை அளித்தல் போன்றவற்றை முறையாக கண்காணிப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் , மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையிலான ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் .
பெற்றோர்கள் இல்லாத குறையை போக்கும் சமூக நலப் பணியை மாவட் கண்காணிப்பு குழு செய்ய வேண்டும் .
சட்ட ரீதியான பாதுகாப்பு இன்றியும் , மனதளவில் அச்சத்தோடும் தவிக்கும் இதுபோன்ற குழந்தைகள் நலனுக்கான உரிய நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகளும் , மத்திய ரிசர்வு வங்கியையும் எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக