ஞாயிறு, 13 ஜூன், 2021

மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருக்கும் இந்நேரத்தில் மானியத்தில் வழங்கும் டீசல் அளவை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.- ஜி.கே.வாசன்

 மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல இருக்கும் இந்நேரத்தில் மானியத்தில் வழங்கும் டீசல் அளவை  தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து ஜூன் மாதம் 14 - ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டது . இக்காலகட்டம் ஆழ்கடலில் மீன் இனப்பெருக்க காலம் என்பதால் கடலில் மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது . 

மீனவர்கள் தற்பொழுது மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று தொழிலை மெற்கொள்ள இருக்கின்றனர் . 

இந்நிலையில் மயிலாடுதுறை , நாகை , மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் இருப்பதால் மற்ற மாவட்டங்கள் போல் கட்டுபாடுகள் அதிக அளவில் தளர்த்தப்படவில்லை , ஏற்கனவே ஊரடங்காலும் , மீன்பிடி தடைக்காலத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளத்துறை தெளிவாக அறிவிக்க வேண்டும் . 

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்க நிவாரண தொகையாக ரூபாய் 5 ஆயிரம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை பெரும்பாலோனோருக்கு அத்தொகை சென்று சேரவில்லை . கொரோனாவாலும் , மீன்பிடி தடைக்காலத்தாலும் வாழ்வாதாரம் இழந்து மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருக்கும் மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் . 

தமிழகத்தில் மீன் மொத்த வியாபாரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது .சில்லரை வியாபாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை . சாதாரண சிறு வியாபாரிகள் சில்லரை வியாபாரத்தால் அவர்களின் வாழ்வாதாரம் மேன்படும் . அதோடு ஏழை , எளிய மக்களுக்கு குறைந்த விலையிலும் மீன்கள் கிடைக்கும் . 

ஆதலால் தமிழக அரசு சில்லரை மீன் விற்பனைக்கு அதிகமாக அனுமதி அளித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் . 

அனைத்து மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் தங்கள் தொழிலை மேற்கொள்ள தமிழக அரசிடம் இருந்து இதுவரை தெளிவாக எந்த அறிவிப்பும் வரைவில்லை . அதோடு தமிழக அரசால் , விசைப்படகுகளுக்கு 1,800 லிட்டரும் , நாட்டுப்படகிற்கு 350 லிட்டரும் டீசல் மான்யமாக வழங்கப்பட்டு வருகிறது . 

இது போதுமானதாக இல்லை . ஆகவே தமிழக அரசு விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் 5,000 லிட்டரும் , நாட்டுப்படகுகளுக்கு , 6000 லிட்டரும் டீசல் மானிய விலையில் அளிக்க வேண்டும் என்று மீனவர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது . 

தமிழக மீனவர்களின் இந்த வேண்டுகோளை பரிசீலனை செய்து ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக