ஞாயிறு, 20 ஜூன், 2021

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட நரிப்பையூர் எனும் கிராமம், இனி ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் இருந்து பெறும்.


 தமிழகத்தின் தென்கிழக்கு கோடியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட நரிப்பையூர் எனும் கிராமம், இனி ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கடலில் இருந்து பெறும். அங்கு நிறுவப்பட்டுள்ள சூரிய ஒளியால் இயங்கும் பார்வார்டு ஆஸ்மாசிஸ் கடல்நீர் சுத்திகரிப்பு அமைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

இதன் மூலம் குடி தண்ணீர் பஞ்சம் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டு, பத்தாயிரம் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தரமான குடிநீர் விநியோகிக்கப்படும். குறைவான மின்சாரத்தில், குறைந்த செலவில் எளிதாக இயக்கக்கூடிய வகையிலான இந்த அமைப்பு நீண்டகாலத்திற்கு உழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

எம்பீரியல் - கே ஜி டி எஸ் ரெனிவபல் எனர்ஜி எனும் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி சென்னை இந்த கடல் நீர் சுத்திகரிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.

உப்புத்தன்மை, நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் தென் கிழக்கு பகுதியில் உள்ள ராமநாதபுரம் மாவட்டம் குடி தண்ணீர் பஞ்சத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 423000  ஹெக்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இம் மாவட்டத்தில் 262 கிலோமீட்டர் நீளத்திற்கு கடற்கரை உள்ளது. மாநிலத்தின் மொத்த கடற்கரை பரப்பளவில் நான்கில் ஒரு பகுதி இதுவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக