சனி, 19 ஜூன், 2021

இந்திய தேசிய இணையதள இணைப்பகம் (NIXI) தனது 18-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய இணைய சூழலியலுக்கு நிக்சி மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது.


 இந்திய தேசிய இணையதள இணைப்பகம் (நிக்சி) இன்று (ஜூன் 19, 2021) தனது 18-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய இணைய சூழலியலுக்கு நிக்சி மிகப்பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. இந்தியாவின் முதல் இணையதள இணைப்பகமான நிக்சி, உள்நாட்டு இணையதள பயன்பாட்டை வழிப்படுத்தும் பணியை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லாமல் நாட்டிலேயே மேற்கொள்வதால் இணையதள சேவை நிறுவனங்களுக்கான சர்வதேச அலைக்கற்றை மீதான தொகை சேமிக்கப்படுவதுடன் சிறப்பான சேவையும் அளிக்கப்படுகிறது.

18 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு “மின்னணு பொருளாதாரம்- தடங்களை விரிவுபடுத்துதல்” என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கிற்கு இந்திய தேசிய இணையதள இணைப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு அஜய் பிரகாஷ் சாவ்னே தலைமையில் நடைபெற்ற இந்த வலைதள கருத்தரங்கில் நிக்சியின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு அனில் குமார் ஜெயின், அட்வைசரி நிறுவனத்தின் நிறுவனரும் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியுமான திரு டிவி ராமச்சந்திரன், ஆசிய பசிபிக் உயர்நிலை கள சங்கத்தின் பொது மேலாளர் திரு லியோனிட் டோடோரோவ், ப்ரைமஸ் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியுமான திரு நிலயா வர்மா, அப்னிக் நிர்வாக கவுன்சிலின் தலைவர் திரு கவுரப் ராஜ் உபாத்யா ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

ஐந்து மொழிகளுடன் தொடங்கிய .भारत (பாரத்) என்ற கள பெயர், தற்போது 22 மொழிகளில் இயங்குகிறது. 22 இந்திய மொழிகளில் கள பெயரைப் பயன்படுத்தும் ஒரே நாடு இந்தியா என்று நிக்சியின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான திரு அனில் குமார் ஜெயின் தெரிவித்தார். உலகெங்கும் இருந்து சுமார் 1000 பேர் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக