திங்கள், 5 ஜூலை, 2021

ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்துவரும் மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்


 ஊரடங்கால் வருமானம் இழந்து தவித்துவரும் மக்களிடமும், தொழில் நிறுவனங்களிடமும் மின்சார வாரியம் வைப்புத் தொகை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்

தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளுக்கு இடையில் , தற்பொழுது தான் சிரிது சிரிதாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பிகொண்டு வருகிறது . 

ஊரடங்கால் சரியான வருமானம் இல்லாமல் தவித்து வரும் இவ்வேலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மாக கழகம் மின்சார நுகர்வோரிடம் வைப்பு தொகை வசூலிக்க உத்திரவிட்டுள்ளது . 

இந்த சிரமமான நேரத்தில் வைப்புத் தொகை செலுத்த சொல்வது ஏழை , எளிய , நடுத்தர மக்களும் மற்றும் தொழில் நிறுவனங்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள் . 

தற்பொழுது ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருந்ததால் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும் . அதனால் தற்பொழுது கணக்கீடு செய்தால் வைப்புத் தொகை அதிகமாக இருக்கும் . மக்கள் மாதாந்திர மின் கண்டனம் செலுத்தவே சிரமப்படும் இந்நேரத்தில் வைப்பு தொகை செலுத்த சொல்வது எந்த விதத்தில் நியாயம் . 

ஆகவே தற்பொழுது மின்சார வாரியம் ஏழை , எளிய , நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை கருதியும் , தொழில் நிறுவனங்களின் சிரமமான சூழ்நிலையையும் உணர்ந்து கூடுதல் வைப்புத் தொகை வசூலிப்பதை தமிழக அரசும் , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக