வெள்ளி, 30 ஜூலை, 2021

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் இந்தியாவின் செயல்திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. - திரு அனுராக் தாகூர்


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளில் இந்தியாவின் செயல்திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கான பயிற்சி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கான உதவி திட்டத்தின் கீழ் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பயிற்சி முகாம்கள், சர்வதேச போட்டித்திறன் குறித்து வீரர்களுக்கு அறிமுகம், இந்திய மற்றும் அயல்நாட்டு பயிற்சியாளர்கள், ஆதரவு பணியாளர்களை பணியமர்த்துதல், பயிற்சி உபகரணங்கள் அளித்தல், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்துதல் மற்றும் காயங்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

24 கேலோ இந்தியா மாநில உயர்சிறப்பு மையங்கள் நாடு முழுவதும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் மூலம் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லக்கூடியவர்களுக்கான தனிப்பட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.

 டோக்கியோ ஒலிம்பிக் 2020-க்கான இந்திய வீரர்களின் தயார் நிலையை கண்காணிப்பதற்காக உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

பெருந்தொற்றின் போது விளையாட்டு வீரர்களை பாதுகாப்பதற்காக பலருக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது. டோக்கியோவிற்கு செல்லக்கூடிய இதர வீரர்களுக்கு சமூக இடைவெளியோடு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பண்டிதர் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நல நிதியின் கீழ் ஏழ்மை நிலையில் வாழும் விளையாட்டு வீரர்கள் மற்றும் உயிரிழந்த விளையாட்டு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது.

ஃபிட் இந்தியாவை மக்கள் இயக்கமாக அரசு ஆக்கி வருகிறது. பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து, பலதரப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்களின் மூலமாக உடல் உறுதி குறித்த விழிப்புணர்வை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

பல்வேறு வயதினருக்கான ஃபிட் இந்தியா உடல் உறுதி நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஃபிட் இந்தியா இயக்கத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள பெருநிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் மற்றும் ஃபிட் இந்தியா மிதிவண்டி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக