சனி, 31 ஜூலை, 2021

1000 ரூபாய், 1500 ரூபாய் அளவு மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருக்கிறது.- வானதி சீனிவாசன்


 கொரானா பரவல் கால கட்டத்தில் வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் பயன்பாட்டுக்கட்டணம் எந்த வித முன்னறிவிப்புமின்றி மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமாக வந்திருக்கிறது. பூட்டியிருக்கும் வீட்டிற்கு 5 மடங்கு அதிகமாக மின் கட்டணம் வந்திருக்கிறது. தொழிற்சாலைகள், திருமண மண்டபங்களுக்கு மூன்று மடங்கு அதிகமாக வந்திருக்கிறது என்று மாவட்டம் முழுவதும் பரவலாக புகார் எழுந்திருக்கிறது.  

1000 ரூபாய், 1500 ரூபாய் அளவு மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5000 முதல் 6000 ரூபாய் வரை மின் கட்டணம் வந்திருக்கிறது. இது தொடர்பாக நேரடியாக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் ஒரு தீர்வும் எட்டப்படாமலேயே இருக்கிறது. இது தொடர்பாக அமைச்சர் நேரடியாக தலையிட்டு மக்களின் குறை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அறிவிக்கப்படாத மின் வெட்டு, அதீத கட்டணம், கட்டுப்படுத்தப்படாத மின் அழுத்தம் என்று சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை மின் வாரியம் அளிக்கிறது. சமூக ஊடகங்களிலும், வெகு ஜன ஊடகங்களிலும் இது தொடர்பான விமர்சனங்கள் வருகிறது. அரசு உடனடியாக தலையிட்டு அதீத மின் கட்டணத்தை ரத்து செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக