செவ்வாய், 27 ஜூலை, 2021

கொரோனா தொற்றை முன்னிட்டு, மன நலத்தை பொது சுகாதார பிரச்சினையாக கருதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.- திரு எம்.வெங்கையா நாயுடு


 கொரோனா  தொற்றை முன்னிட்டு, மன நலத்தை பொது சுகாதார பிரச்சினையாக கருதி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள பழங்கால இந்து கோயில்கள் பற்றி ஆந்திரப் பிரதேச முன்னாள் எம்எல்ஏ திரு என்.பி. வெங்கடேஸ்வர சவுத்திரி ‘கம்போடியா - இந்து தேவாலயலா புன்னிய பூமி மற்றும் நேதி வியட்நாம் - நாதி ஹைன்தவா சம்ஸ்கிருதி’ என்ற தலைப்பில் எழுதிய இரண்டு தெலுங்கு புத்தகங்களை காணொலி காட்சி மூலம் குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

வேகமான, மந்தமான வாழ்க்கை முறைகளை பின்பற்றுவது, மக்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில், ஆன்மீகம் பதற்றங்களை தணிக்கும். ஆன்மீக தலைவர்கள் ஆன்மீகம் மற்றும் சேவைகளை இளைஞர்களிடமும், மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரு குடும்பமாக பார்ப்பது இந்திய வாழ்க்கை முறை. நாட்டின் பழமையான நெறிமுறைகளையும், பாரம்பரியத்தையும் இந்திய இளைஞர்கள் நிலை நிறுத்த வேண்டும். நமது கலை நினைவுச் சின்னங்கள், கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்கள் பார்த்து, நமது பழங்கால சின்னங்களில் இருந்து உத்வேகம் பெற வேண்டும்.

கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள பழங்கால இந்து கோயில்களின் கலை மற்றும் கட்டிடக் கலை ஆகியவை பழங்கால இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்றன.

கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயிலுக்கு நான் சென்றுள்ளேன். இது போன்ற கோயில்களுக்கு செல்ல இளைஞர்கள் முயற்சித்து இந்தியாவின் மிகச் சிறந்த கடந்த காலத்தை அறிய வேண்டும்.  

இந்தியாவில் உள்ள கோயில்கள், நமது வரலாற்றில், முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை கற்றலின் முக்கிய மையங்களாக உள்ளன. மக்களின் சமூக வாழ்வில், கோயில்கள் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளன. இசை, நடனம், நாடகம் மற்றும் சிற்பங்களின் மையங்களாக கோயில்கள் வளர்ந்தன. சுயராஜ்ய இயக்கத்தில், கோயில்கள் முக்கிய பங்காற்றின. இந்த புத்தகங்கள் மூலம் கம்போடியா மற்றும் வியட்நாமில் உள்ள கோயில்கள் பற்றி அருமையான தகவல்களை தெரிவிக்கும் நூலாசிரியர் திரு என்.பி. வெங்கடேஸ்வர சவுத்திரியின் முயற்சிகள் பாராட்டத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக