சனி, 31 ஜூலை, 2021

1930-ஆம் ஆண்டு முதல் ,1950களின் வரை, ஆரம்பகால தெலுங்கு சினிமாவின் 450-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஸ்லைடுகளின் அரிய பொக்கிஷத்தை தேசிய திரைப்பட காப்பகம் பெற்றுள்ளது.


 1930-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து, 1950 களின் நடுப்பகுதி வரை, ஆரம்பகால தெலுங்கு சினிமாவின் 450-க்கும் மேற்பட்ட கண்ணாடி ஸ்லைடுகளின் அரிய பொக்கிஷத்தை தேசிய திரைப்பட காப்பகம் பெற்றுள்ளது.

இதன் மூலம் தனது சேகரிப்பில், 450க்கும் மேற்பட்ட திரைப்பட கண்ணாடி ஸ்லைடுகளை இந்திய தேசிய திரைப்பட காப்பகம் பெற்றுள்ளது.

இந்த கண்ணாடி ஸ்லைடுகள் ஆரம்பகால சினிமா பார்க்கும் அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். திரைப்படத்தின் பாசிட்டிவ் பிலிம் இரு கண்ணாடிகளுக்கு  இடையே அழுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதுதான் இந்த சிலைடுகள். இவை திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவெளியின் போதும் புதிய படத்தின் விளம்பரமாக காட்டப்படும்.

இது குறித்து இந்திய தேசிய திரைப்பட காப்பகத்தின் இயக்குனர் திரு பிரகாஷ் மேக்டம் கூறுகையில், ‘‘ கண்ணாடி சிலைடுகள், இந்திய சினிமா பாரம்பரியத்தின் நேர்த்தியான பதிவுகள். இவற்றை எங்கள் காப்பகத்தில் சேகரிப்பதில், பாதுகாத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  வேகமாக மாறும் தொழில்நுட்ப பின்னணியில், இந்த கண்ணாடி சிலைடுகளை அதிகளவில் வைத்திருப்பது மிகவும் அரிதானது மற்றும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு.

திரைப்படத்தை நேசிக்கும் அனைவரும், தாங்கள் வைத்திருக்கும் படக் காட்சிகள், புகைப்படங்கள், சுவரொட்டிகள், லாபி கார்டுகள் மற்றும் பிற பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் அவற்றை பாதுகாக்க முடியும்’’ என்றார்.

இந்திய தேசிய திரைப்பட காப்பகத்தின் ஆவணங்கள் பிரிவு பொறுப்பாளர் திருமதி ஆர்த்தி கர்கானிஸ் கூறுகையில், ‘‘இந்த கண்ணாடி சிலைடுகள், பழங்காலத்தில் தெலுங்கு சினிமாத்துறையின்  விளம்பரம் குறித்த விரிவான பார்வையை அளிக்கிறது. திரைப்பட ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகச் சிறந்த குறிப்புகள். இவற்றை நாங்கள் விரைவில் டிஜிட்டல் மயமாக்குவோம்’’ என்றார்.  

கடந்த ஆண்டும், இந்திய தேசிய திரைப்பட காப்பகம், சுமார் 400 கண்ணாடி சிலைடுகளை பெற்றது. தற்போது இந்திய தேசிய திரைப்பட காப்பகத்திடம், இந்தி, குஜராத்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களின்  2000க்கும் மேற்பட்ட கண்ணாடி சிலைடுகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக