செவ்வாய், 27 ஜூலை, 2021

இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.- திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா


 நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

ஆயுஷ் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச  பிரச்சாரம், பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள், வர்த்தக வசதியளித்தல், பிரத்யேக ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவை நிறுவுதல், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க தொழில்துறை மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆதரவு, உலக சுகாதர அமைப்பு மற்றும் ஐஎஸ்ஓ ஆகியவற்றுடன் இணைந்து தர நிலைகளை உருவாக்குவதற்கக நிபுணர்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்புதல், முதலீடுகளுக்கு ஊக்கம், சர்வதேச அயுஷ் நிறுவனங்களை அமைத்தல், இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.

ஆயுஷ் துறையின் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காகவும், உலகத்தரம் வாய்ந்த நவீன ஆயுஷ் மருத்துவமனைகளை நிறுவுவதற்கு ஆதரவு அளிப்பதற்காகவும் சாம்பியன் சேவைகள் திட்டம் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது. ஆயுஷ் சேவைகளை வழங்குவதற்காக 12.500 ஆயுஷ் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கிழ் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவக் குணமுள்ளத் தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மைக்கான திட்டத்தை ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவக் குணமுள்ளத் தாவரங்கள் வாரியம் செயல்படுத்தி வருகிறது.

ஏழு மாநிலங்களில் 24 மருத்துவத் தாவரங்கள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பகுதிகளுக்குத் திட்டம் சார்ந்த ஆதரவை தேசிய மருத்துவக் குணமுள்ளத் தாவரங்கள் வாரியம் வழங்கியுள்ளது. ரூ 940 லட்சத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ 635.99 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக