நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் திரு மகேந்திரபாய் முஞ்சப்பாரா கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
ஆயுஷ் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, சர்வதேச பிரச்சாரம், பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு பேச்சுவார்த்தைகள், வர்த்தக வசதியளித்தல், பிரத்யேக ஆயுஷ் ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவை நிறுவுதல், சர்வதேச கண்காட்சிகளில் பங்கேற்க தொழில்துறை மற்றும் மருத்துவமனைகளுக்கு ஆதரவு, உலக சுகாதர அமைப்பு மற்றும் ஐஎஸ்ஓ ஆகியவற்றுடன் இணைந்து தர நிலைகளை உருவாக்குவதற்கக நிபுணர்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்புதல், முதலீடுகளுக்கு ஊக்கம், சர்வதேச அயுஷ் நிறுவனங்களை அமைத்தல், இந்தியாவின் ஆயுஷ் படிப்புகளைப் படிக்கும் வெளிநாட்டவருக்குக் கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆயுஷ் அமைச்சகம் எடுத்து வருகிறது.
