வியாழன், 22 ஜூலை, 2021

தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு. அரசு அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா? - கி.வீரமணி

 தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு. அரசு அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா? - கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மதுரைக்கு வருகிறாராம். அவர் வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர், மதுரை மாநகர மண்டல அலுவலர்களுக்கு ஓர் சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரா? அரசின் தலைவரா? என்ற கேள்வி எழுகிறது. மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸின் தலைவருக்கு ஓர் அரசு அதிகாரி இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பது எதைக் காட்டுகிறது?

அறியாமையால் இது நடந்தது என்று சொல்ல முடியாது. ஒரு மாநகராட்சியின் உதவி ஆணையராக உள்ளவருக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்ல முடியாது. தெரிந்தும் இப்படி செயல்பட்டுள்ளார் என்றால், இதன் பொருள் என்ன?

இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் ஊடுருவல் பல துறைகளிலும், பல மட்டங்களிலும் இருக்கலாம். அத்தகையவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

தமிழ்நாடு அரசின் விரைவான நடவடிக்கை பாராட்டுக்குரியது

இதுகுறித்து அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவலை அவர் தெரிவித்தது ஆறுதலை அளிக்கிறது.

இதனை ஓர் எச்சரிக்கையாக அதிகாரிகள் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக