செவ்வாய், 20 ஜூலை, 2021

தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான நடவடிக்கையாகவும், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், ஊரக சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம்.


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுற்றுலா அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி, கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

நாட்டில் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக நமது நாட்டை பாருங்கள் இணைய கருத்தரங்குகள், ஒரே பாரதம் ஒப்பற்ற பாரதத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள், சென்னை உட்பட பல்வேறு நகரங்களை வானில் இருந்து படம் பிடித்தல், தொழில்துறை பங்குதாரர்களுடன் தொடர் ஆலோசனை, பாதுகாப்புடன் கூடிய உயர்தர சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சுற்றுலா அமைச்சகம் எடுத்து வருகிறது.

சந்தை மேம்பாட்டு உதவி திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை சுற்றுலா அமைச்சகம் சமீபத்தில் மாற்றியமைத்தது. இதன் மூலம் திட்டம் அதிகம் பேரை சென்றடையும்.

11,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள்/பயணம் மற்றும் சுற்றுலா பங்குதாரர்களுக்கு புதிய கடன் உத்தரவாதத்தை மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இதன் மூலம் கொவிட்-19 காரணமாக அடைந்த பாதிப்பில் இருந்து அவர்களால் மீள முடியும்.

கிராமப்புற சுற்றுலாவின் சாத்தியக்கூறுகளை உணர்ந்துள்ள சுற்றுலா அமைச்சகம், அதை மேம்படுத்தி ஊக்குவிப்பதற்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கான நடவடிக்கையாகவும், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும், ஊரக சுற்றுலாவை ஊக்கப்படுத்துவதற்கான தேசிய வரைவு திட்டம் ஒன்றை சுற்றுலா அமைச்சகம் தயாரித்துள்ளது.

கொள்கையை இறுதி செய்வதற்கு முன் அது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சுற்றுலா அமைச்சகம் வரவேற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக