வியாழன், 22 ஜூலை, 2021

விவசாயிகளை தற்சார்பு நிலையை எட்ட செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது.- திரு நரேந்திர சிங் தோமர்


 விவசாயிகளின் விளைப்பொருட்கள் விற்பனை மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு & வசதியளிப்பு) சட்டம் 2020 மற்றும் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் குறித்த விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த சட்டம், 2020 ஆகியவற்றின் கீழ் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கு விரைவான மற்றும் சிறப்பான தீர்வை தீர்வுகாணும் வாரியம் மற்றும் துணை மண்டல அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியரால் காண்பதற்காக, துணை மண்டல அளவிலான செயல்முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

துணை மண்டல அளவிலான அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நில வருவாய், நில ஆவணங்கள் மற்றும் பயிர் மற்றும் நில பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றில் போதுமான கள அனுபவம் இருப்பதால், வேளாண் சட்டங்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.

பரம்பராகத் கிரிஷி விகாஸ் திட்டத்தின் துணை திட்டமாக பாரதிய பிரக்ரிதிக் கிரிஷி பதாதியை 2020-21 முதல் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பாரம்பரிய உள்நாட்டு செயல்முறைகளுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், குழு உருவாக்கம், திறன் வளர்த்தல், நிபுணர்களின் வழிகாட்டுதல், சான்றிதழ் வழங்குதல் மற்றும் ஆய்வுக்காக ஒரு ஹெக்டேருக்கு மூன்று வருடங்களுக்கு ரூ 12,200 வழங்கப்படுகிறது.

எட்டு மாநிலங்களில் உள்ள 4.9 லட்சம் ஹெக்டேருக்கு ரூ 4980.99 லட்சம் இது வரை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2000 ஹெக்டேருக்கு ரூ 31.82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புதுதில்லியில் உள்ள பூசாவில் தாவர ஆணைய கட்டிடத்திற்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று அடிக்கல் நாட்டினார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், தாவர வகைகளையும், விவசாயிகளின் உரிமைகளையும் தாவர ஆணையம் பாதுகாக்கும் என்றார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர் எளிதாக அணுகும் வகையில் புதிய கட்டிடம் இருக்கும் என்று கூறினார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்கள் திரு கைலாஷ் சவுத்ரி மற்றும் திருமிகு ஷோபா கரந்த்லாஜே, செயலாளர் திரு சஞ்சய் அகர்வால் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தேசிய விவசாயிகள் நல திட்ட செயல்படுத்துதல் குழு அலுவலகத்தையும் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகளை தற்சார்பு நிலையை எட்ட செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறினார்.

பிரதமரின் விவசாயிகள் திட்டம், கிசான் மாந்தான் திட்டம், வேளாண் உள்கட்டமைப்பு நிதி மற்றும் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இதர திட்டங்களின் செயல்படுத்துதலின் கண்காணிப்பு மையமாக தேசிய விவசாயிகள் நல திட்ட செயல்படுத்துதல் குழு திகழும் என்று அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக