செவ்வாய், 20 ஜூலை, 2021

கொவிட்டுக்கு எதிரான நாட்டின் போருக்கு வலுவூட்டும் வகையில், 1554 படுக்கைகளுடன் மிகப்பெரிய கொவிட் மருத்துவமனைகள் பொதுத்துறை எஃகு ஆலைகளால் நிறுவப்பட்டன.- மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத்


 நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

நாட்டின் எஃகு உற்பத்தி திறன் தற்சமயம் 143.91 மில்லியன் டன்களாக உள்ளது. 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய சுரங்கங்கள் அலுவலகத்தின் இந்திய தாதுக்கள் ஆண்டு புத்தகத்தின் படி, 254 செயல்படும் சுரங்கங்கள் 2018-19-ல் இருந்தன. இவற்றில் 35 பொதுத்துறையிலும், 219 தனியார் துறையிலும் இருந்தன.

2019-20-ம் ஆண்டில், எஃகு உற்பத்தி 102.62 மில்லியன் டன்களாகவும், நுகர்வு 100.17 மில்லியன் டன்களாகவும், ஏற்றுமதி 8.36 மில்லியன் டன்களாகவும், இறக்குமதி 6.77 மில்லியன் டன்களாகவும் இருந்தன.

2020-21-ம் ஆண்டில், எஃகு உற்பத்தி 96.20 மில்லியன் டன்களாகவும், நுகர்வு 94.89 மில்லியன் டன்களாகவும், ஏற்றுமதி 10.78 மில்லியன் டன்களாகவும், இறக்குமதி 4.75 மில்லியன் டன்களாகவும் இருந்தன.

2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை, எஃகு உற்பத்தி 26.35 மில்லியன் டன்களாகவும், நுகர்வு 24.85 மில்லியன் டன்களாகவும், ஏற்றுமதி 3.56 மில்லியன் டன்களாகவும், இறக்குமதி 1.16 மில்லியன் டன்களாகவும் இருந்தன.

2020-21-ல் தமிழ்நாட்டில் உள்ள சேலம் எஃகு ஆலையின் திறன் 180000 டன்களாகவும், உற்பத்தி 100000 டன்களாகவும் இருந்தன. தனியார் துறையை பொருத்தவரை தமிழ்நாட்டில் 90 யூனிட்டுகளும், அவற்றின் திறன் 3542000 டன்களாகவும், உற்பத்தி 2059000 டன்களாகவும் இருந்தன.

2020-21-ம் ஆண்டில் 4.75 மில்லியன் டன் எஃகு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 10.78 மில்லியன் டன் எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது.

2021 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 1.16 மில்லியன் டன் எஃகு இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 3.56 மில்லியன் டன் எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கொவிட்டுக்கு எதிரான நாட்டின் போருக்கு வலுவூட்டும் வகையில், 1554 படுக்கைகளுடன் மிகப்பெரிய கொவிட் மருத்துவமனைகள் பொதுத்துறை எஃகு ஆலைகளால் நிறுவப்பட்டன.

ராஷ்டிரிய இஸ்பட் நிகாம் லிமிடெட் விசாகப்பட்டிணத்திலும், செய்ல் நிறுவனம் போகாரோ, பிலாய், ரூர்கேலா, பர்ன்பூர் மற்றும் துர்காபூரிலும் மருத்துவமனைகளை நிறுவின.

பெருந்தொற்றின் போது அதிகபட்சமாக 4749 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் எஃகு துறையால் உற்பத்தி செய்யப்பட்டது. 165 பிராண வாயு செறிவூட்டிகள் மற்றும் நான்கு ஆலைகள் பொதுத்துறை எஃகு ஆலைகளால் நிறுவப்பட்டன.

தமிழ்நாட்டுக்கு 2021 ஏப்ரல் மாதத்தில் 1212.83 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனும், மே மாதத்தில் 3832.5 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனும், ஜூன் மாதத்தில் 4646.21 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக